வணக்கம் நண்பர்களே!
விரைய தசா ஆரம்பித்த நாளில் இருந்து பொருளாதார விசயங்களைப்பற்றி் அவ்வப்பொழுது சொல்லி வருகிறேன். ஒருத்தர் செலவு செய்வதை கவனித்தாலே அவர்கள் சேமிக்க தொடங்கிவிடுவார்கள்.
பல இளைஞர்கள் இப்பதிவை படிக்கிறீர்கள். உங்களுக்கு சொல்லவேண்டிய ஒரு செய்தி இருக்கிறது. நீங்கள் கை நிறைய சம்பளம் வாங்குகிறீர்கள் அது உங்களின் உழைப்பால் கிடைத்தது. அந்த சம்பளத்தை நல்ல வழியில் சேமிக்க பாருங்கள்.
பல ஐடி கம்பெனிகளில் வேலை செய்யும் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் பலவிதமான செல்போன்களை வாங்குவதிலேயே அவர்களின் பணத்தை வீணாக செலவு செய்கிறார்கள். ஒருத்தருக்கு ஒரு போன் வாங்கினால் போதும் அதனை பல வருடங்கள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
செல்போன் கம்பெனி இரண்டு மாதத்திற்க்கு ஒரு போனை வெளியிட்டுக்கொண்டே இருப்பார்கள். அதில் பெரிய மாற்றம் ஒன்றும் இருக்காது. நல்ல விளம்பரம் செய்து உங்களின் பணத்தை பிடிங்கிவிடுவார்கள். பல இளைஞர்களை நான் பார்த்து இருக்கிறேன் மாதத்திற்க்கு ஒரு போனை வாங்குவதிலேயே அவர்களின் வேலையாக வைத்திருப்பார்கள்.
மாதம் மாதம் பணம் கட்டுவதில் செல்போனை வாங்கினாலும் உங்களின் பணம் கொஞ்சம் கொஞ்சமாக சென்றுக்கொண்டே இருக்கிறது. இப்படி செல்லும் பணத்தை கணக்கு பார்த்தால் உங்களின் வாழ்நாளில் மிகப்பெரிய தொகையை நீங்கள் இழப்பீர்கள்.
வாழ்க்கையில் ஜாலியாக இருக்கவேண்டியது தான் அதற்கு வீணாக செலவு செய்யவேண்டும் என்பது கிடையாது. நமக்கு தேவை என்றால் வாங்கலாம். நமக்கு தேவையில்லை என்றால் அதனை வாங்ககூடாது. எனது செல்போன் நான்கு வருடத்திற்க்கு முன்பு 2400 ரூபாய்க்கு வாங்கியது.
அந்த போனில் உள்ள வசதிக்கு மேல் எனக்கு தேவை ஏற்படவில்லை என்பதால் வேறு போனை நான் வாங்கவில்லை. இதனை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் நமக்கு இந்த வசதி தேவை என்றால் அதனை வாங்கிக்கொள்ளலாம். அதன் தேவை நமக்கு தேவையில்லை என்றால் நாம் தேவையில்லாமல் பணத்தை கொண்டு அதில் முடக்ககூடாது.
என்னைப்போல் இருக்க வேண்டும் என்று உங்களிடம் கட்டளை இடவில்லை மாறாக உங்களின் பணத்தை தேவையில்லாத விசயங்களில் போட்டு முடக்கிவிடாதீர்கள் என்று சொல்லுகிறேன்.
என்னடா சோதிடத்தை பற்றி எழுதுவார் என்று பார்த்தால் செல்போனைப்பற்றி எழுதுகிறார் என்று நினைக்கதோன்றும். நீங்கள் இப்படி செலவு செய்வதற்க்கு காரணமே உங்களுடைய ஜாதகத்தில் விரைய வீடான பனிரெண்டாவது வீட்டில் உள்ள கிரகங்கள் மற்றும் அதன் அதிபதி தான் இப்படி வீணான செலவை இழுத்துவிடுகிறார்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Not only mobile ,but, recurring expenses of Data downloading etc.Further to that loosing sleep,health in the long run etc
Post a Comment