Followers

Thursday, July 10, 2014

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சில சிக்கல்கள் நிறைந்த வேலைகளை எடுத்து செய்யும்பொழுது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் இல்லாமல் எனக்கும் பிரச்சினை கொடுத்துவிடும். நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று ஒரு வேலை செய்ய வேண்டும் என்று காலையில் இருந்து தயார் செய்து பூஜையில் அமர்ந்து பூஜையை செய்துவிட்டு அமர்ந்தேன்.

பூஜையை செய்துவிட்டு அமர்ந்த அடுத்த ஐந்து நிமிடத்தில் இருந்து திடீர் என்று உடலில் காய்ச்சல் ஏற்பட்டுவிட்டது. சரி பார்த்துக்கொள்ளலாம் என்று ஒரு சின்ன தூக்கத்தை போட்டேன். கொஞ்சம் நேரத்திற்க்கு எல்லாம் காய்ச்சல் நின்றுவிட்டது. உடல் நலமாகிவிட்டது. 

ஒரு மணி நேரத்திற்க்கு பிறகு சம்பந்தப்பட்ட நபருக்கு பெரிய அளவில் பணத்தை தொழிலில் இழந்துவிட்டார். அவரால் அந்த நேரத்தில் ஒன்றும் செய்யமுடியாமல் என்னை தொடர்புக்கொண்டார். நான் மதிய உணவிற்க்காக வெளியில் சென்று சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். உடனே நான் எனது அறைக்கு வந்து அவர்க்கு செய்ததை எடுத்துவிட்டேன்.

பணஇழப்பை மறுபடியும் சரி செய்யவேண்டும். அப்படி என்ன வேலை என்று கேட்கிறீர்களாக கிரகங்களை கட்டலாம் என்று  செய்த வேலை தான் அது. என்னை கட்டிவிடுவாயா என்று செய்யும் பிரச்சினை தான் இப்படி வரும். என்ன தான் பிரச்சினை செய்தாலும் கட்டிவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் ஒரு கிரகத்திற்க்கு ஒரு பரிகாரம் செய்தாலே அது நம்மை தாக்கும். ஒரு கிரகத்தை தீயவேலையே செய்யவிடாமல் செய்வது என்றால் எப்படி இருக்கும்.

கிரகங்களை கட்டிவேலை செய்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு முதலில் பிரச்சினை வருவது இயற்கையான ஒரு விசயம் தான். பிறகு படிப்படியாக குறைந்துவிடும்.

 நம்பினால் நம்புங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Arun said...

நான் நம்புகிறேன்..