வணக்கம் நண்பர்களே!
என்னிடம் நிறைய நண்பர்கள் கேட்பது ஒரு தொழில் செய்பவர்களுக்கு செய்வது போல் ஏன் தனிநபர்களுக்கு செய்வதில்லை என்று கேட்பார்கள். அவர்களிடம் சொன்னதை உங்களிடம் சொல்லுகிறேன்.
எல்லாருக்கும் நல்லதை செய்துக்கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு தனிநபருக்கு செய்யும்பொழுது அந்த பிரச்சினை அப்பொழுது முடிவடைந்து விடும் அதன் பிறகு ஒரு சில நாட்களில் வேறு பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்துவிடும். ஒரு தனிநபருக்கு வாங்கும் பணம் அதிகமாக இருக்கும். அடுத்த பிரச்சினைக்கும் மறுபடியும் பணம் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ஒரு தொழில் செய்பவர்களுக்கு நான் செய்துக்கொடுக்கும்பொழுது அவர்கள் மாதம் மாதம் எனக்கு பணம் அனுப்பிக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு சிறு வயிற்றுவலி வந்தால் கூட எனக்கு தான் போன் செய்வார்கள். ஒரு தொழில் அதிபர் ஒரு வருடத்தில் எனக்கு பணம் அனுப்புவதை கணக்கு பார்த்தால் மிக குறைந்தளவு பணமே வரும். ஒரு தனிநபர் ஒரு தடவை வரும்பொழுது செலுத்தும் பணத்தைவிட தொழில் அதிபர்கள் செலுத்தும் பணம் குறைவாக இருக்கும்.
ஜாதககதம்பத்தில் முதலில் வந்த தொழில் நபர்கள் அனைவரும் குறைந்தளவு பணத்தை மட்டும் செலுத்திக்கொண்டு வந்தார்கள். ஒரு சிலர் மாதம் 500 ரூபாய் அனுப்பியவர்களும் உண்டு. நான் ஒரு தனிநபருக்கு பித்ரு தோஷம் என்று வந்தால் 1 லட்சம் பணம் கேட்பேன். இப்பொழுது நிறைய விதிகளை மாற்றிவிட்டேன்.
வருடந்தோறும் நான் அவர்களுக்கு பார்த்து நல்லது செய்தர்க்கு எனக்கு வந்த தொகை பத்து ஆயிரம் என்றால் ஒரு தனிநபருக்கு நான் வாங்கி பணம் ஒரு லட்சம் என்று வருகிறது. இதில் யாருக்கு அதிர்ஷ்டம். தொழில் செய்பவர்களுக்கு மட்டுமே அதிர்ஷ்ட காத்து வீசியது. இப்பொழுது குறைந்தளவு இருபந்தைந்து லட்சம் இருந்தால் மட்டுமே தொழில் அதிபர்களுக்கு செய்வது உண்டு.
குடும்ப மருத்துவருக்கு தான் உங்களின் பிரச்சினை என்ன என்று சரியாக தெரியும். நோய் வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தால் கண்ட மருத்துவரிடம் சென்று உங்களின் பணத்தை இழக்க நேரிடும். அதுபோல் தான் சோதிடர்களும்.
யாராவது ஒரு சோதிடர்களிடம் சென்று பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு சில விசயங்களை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே செய்து தரமுடியும் என்ற காரணத்தால் தொழில் செய்பவர்களை தேர்ந்தெடுத்தேன்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment