வணக்கம் நண்பர்களே!
நமது நண்பர்களை சந்திக்கும்பொழுது அவர்களை பார்க்கும்பொழுது ஒன்றைப்பற்றி சொல்லவேண்டும் என்று தோன்றும். அவர் அவர்களின் நம்பிக்கையை நாம் ஏன் சிதைக்க வேண்டும் என்று விட்டுவிடுவது உண்டு.
கையில் இஷ்டத்திற்க்கு கயிறைக்கட்டிக்கொள்வது. இடுப்பில் ரசமணியை மாட்டிக்கொள்வது. இது எல்லாம் எதற்கு என்று கேட்டால் நான் தொழில் செய்துக்கொண்டிருக்கிறேன் அதனால் இதனை கட்டிக்கொண்டு வசிகரிக்கிறேன் என்று சொல்லுகிறார்கள்.
ரசமணியை பயன்படுத்தும்பொழுது உங்களுக்கு மிகப்பெரிய தோஷம் ஏற்படும். தோஷத்தை நீக்கி தான் இதனை தயாரிக்கிறோம் என்று சொன்னாலும் கண்டிப்பாக உங்களுக்கு தோஷம் ஏற்படும். எதனை செய்தாலும் அதனை நல்லவழியில் சென்று பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
ஆன்மீகமும் அப்படிப்பட்ட ஒன்று தான். கோவிலுக்கு சென்று வந்தால் போதும். கோவிலை வணங்கிவிட்டு உங்களின் வேலையை செய்தாலும் போதும். கடவுள் உங்களை காப்பாற்றுவார். ஆன்மீகவாதிகளை நம்பி சென்றால் உங்களை இப்படிப்பட்ட தோஷங்களில் சிக்க வைத்துவிடுவார்கள். அவர்கள் சம்பாதித்துவிட்டு சென்றுவிடுவார்கள் மாட்டிக்கொள்வது நீங்களாக இருக்கும்.
இப்பொழுது கோவில்களில் கயிறு விற்பனை நன்றாக நடக்கிறது. அதனையும் நீங்கள் அளவோடு பயன்படுத்திக்கொள்வது நல்லது. உங்களின் நரம்பு மண்டலத்திற்க்கு கயிற்றை இறுக்கி கட்டிவிட்டால் ஒற்றுவராது. அதனை எல்லாம் பார்த்து கட்டிக்கொள்ளுங்கள்.
மாட்டுக்கு கயிறு கட்டுவது போல் ஆண்களும் பெண்களும் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். என்னை பொறுத்தவரை ஒரு டாலர் போட்டுக்கொண்டால் போதும். நிறைய கயிற்றை கழுத்தில் கட்டிக்கொண்டு உங்களின் சுமையை அதிகரித்துக்கொள்ளாதீர்கள்.
ஒரு பிரச்சினைக்காக ஒரு கயிற்றை வாங்கி கட்டிக்கொண்டால் அந்த பிரச்சினை தீர்ந்த பிறகு அந்த கயிறை அவிழ்த்துவிடுவது நல்லது. ஒரு சில பேரை பார்த்து நான் பயந்துவிடுவேன். அந்தளவுக்கு கயிற்றை வாங்கி கட்டிக்கொள்வார்கள்.
உங்களின் மனதில் ஆன்மீகத்தை வரவழைக்க முயற்சி செய்யுங்கள் உங்களின் உடலில் ஆன்மீக அடையாளம் வேண்டாம்.
நான் செய்வது எந்த வேலையும் நேர்மையான வழியில் தெய்வீக சக்தியை வைத்து மட்டும் தான் செய்வேன். நேர்மையாக செல்லும்பொழுது மட்டுமே உங்களின் வழி நன்றாக இருக்கும். தவறான வழியை தேர்ந்தெடுத்தால் உங்களின் வாழ்க்கை நன்றாக இருப்பது போல் தோன்றும். கொஞ்ச நாளில் மாட்டிக்கொள்வீர்கள். இரசமணியை பயன்படுத்தாதீர்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
2 comments:
Nalla sonneenga.
Dear sir
can i use rudrasha malai
Thanks
Post a Comment