வணக்கம் நண்பர்களே!
வெளிநாட்டில் இருப்பவர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசும்பொழுது ஒரு சில வார்த்தைகளை அனைவரும் ஒன்றாக சொல்லி வருவதை நான் கேட்டுருக்கிறேன். சார் எக்னாமிக்கல் பிரச்சினை இருக்கிறது என்று சொல்லுகிறார்கள்.
நான் இதனை ஏன் சொல்லி வருகின்றனர் என்று யோசித்தபொழுது தான் ஒரு உண்மை தெரியவந்தது. வெளிநாட்டில் இருந்தால் சோதிடர்கள் அதிக பணம் கேட்பார்கள் என்று எச்சரிக்கையுடன் முதலிலேயே பொருளாதார சிக்கல் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள்.
சாப்ட்வேரில் வேலை செய்யும் நண்பர்கள் கூட இதனை மறக்காமல் சொல்லி வருகின்றனர். ஒரு சில லேபர்கள் சொன்னால் பரவாயில்லை என்று ஏற்றுக்கொள்ளலாம். அமெரிக்காவில் சாப்ட்வேரில் வேலை செய்துக்கொண்டு பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்கிறது என்று சொல்லுகிறார்கள்.
நல்ல படித்து நல்ல வேலையில் இருக்கும் உங்களுக்கே பொருளாதாரத்தில் பிரச்சினை என்று சொன்னால் படிக்காமல் சோதிட தொழிலை செய்துக்கொண்டு இந்தியாவில் பிழைப்பை நடத்தும் எனக்கு எவ்வளவு பொருளாதார சிக்கல் இருக்கும்.
எனது தொழில் இது மட்டுமே இந்த தொழிலில் தான் நான் சம்பாதித்து எனது குடும்பத்தை நடத்தமுடியும். இதில் நான் மனமிரங்கி உங்களுக்கு செய்துக்கொண்டு இருந்தால் எனது குடும்பம் நடுவீதிக்கு வந்துவிடும். அதனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்த காரணத்தை சொல்லாமல் தவிர்த்துவிடுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment