வணக்கம் நண்பர்களே!
கற்பனை செய்யாமல் இருக்க முடியுமா. அவ்வாறு முடியவில்லையெனில் நல்லவிதமான கற்பனைகளை எவ்வாறு வளா்த்து கொள்வது. தீய கற்பனைகளை எவ்வாறு நீக்குவது என்பதை தயவு செய்து பதில் அளியுங்கள் அண்ணா
பிரசன்னகுமார்
வணக்கம் கற்பனை செய்யாமல் இருக்கமுடியாது. தீயகற்பனை செய்வது தவறு என்பதைப்பற்றி இப்பொழுது தான் உங்களுக்கு தெரிய வந்திருக்கிறது. தீய கற்பனைகள் செய்வது இதுவரை செய்துவந்திருந்தால் பரவாயில்லை. தெரிந்த பிறகு தீயகற்பனைகள் செய்ய வேண்டாம்.
ஒரு விசயம் தவறு என்று மனதிற்க்கு தெரிந்த பிறகு அதன் பிறகு அதனை செய்யும்பொழுதே உங்களின் மனமே அதனை தடுக்க பார்க்கும். அதன் பிறகு நீங்களே நிறுத்திக்கொள்வீர்கள்.
நல்ல கற்பனைகள் உங்களைப்பற்றியே நீங்களே உருவாக்கிக்கொள்வது நல்லது. ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே நான் சொல்லியுள்ளேன். நீங்கள் வணங்கும் தெய்வங்களுக்கு ஆராதனை மற்றும் அபிஷேகம் செய்வது போல் செய்யுங்கள் என்று சொல்லியுள்ளேன். அப்படி செய்து உங்களின் ஆன்மீகவளத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.
கற்பனையைப்பற்றி நான் சொன்னது நிறைய பேருக்கு போய் சேர்ந்து இருக்கும் என்றும் நினைக்கிறேன். அனைவரும் இதனைப்பற்றி கேட்கின்றனர். இப்படிப்பட்ட விசயகள் இனி உங்களுக்கு நிறைய தருகிறேன்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment