Followers

Thursday, July 17, 2014

எதார்த்தம்


வணக்கம் நண்பர்களே!
                    சோதிடர்களிடம் நமது நண்பர்கள் எதிர்பார்ப்பது எப்படியும் சோதிடர்களை ஏமாற்றிவிட்டு இலவசமாக அனைத்து காரியத்தையும் முடித்துவிட்டு வந்துவிடவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். சோதிடர்கள் வருபவர்களை எப்படியும் ஏமாற்றிவிடவேண்டும் என்று இல்லாததை சொல்லிவிட்டு பணத்தை பிடுங்க பார்ப்பார்கள்.

இருவரும் ஏமாற்றும் மனநிலையில் இருக்கும்பொழுது அங்கு காரியம் எப்படி வெற்றிபெறும். இருவர்களின் மனநிலைப்படி தான் காரியம் நடைபெறும். இருவரையும் கிரகங்கள் ஏமாற்றிவிட்டு அதன் வேலையை செய்துவிட்டு போய்விடும். 

உங்களுக்கு வேலை நடக்கவேண்டும் என்றால் நல்ல சோதிடராக பார்த்து அவரிடம் பணத்தை முதலிலேயே கொடுத்துவிட்டு இந்த பிரச்சினையை தீர்த்துக்கொடுங்கள் என்றால் அவரால் முடிந்தளவு முயற்சி செய்து உங்களை காப்பாற்றுவார்.

நான் பரிகாரங்கள் செய்ய செல்வதில்லை ஒரு சில நபர்கள் என்னிடம் வந்து இந்த பிரச்சினையை எப்படியும் தீர்த்துக்கொடுங்கள் என்று கேட்பார்கள். நானும் அதனை ஏற்றுக்கொண்டு பணம் எவ்வளவு தருவீர்கள் என்று கேட்பேன். அவர்கள் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்பார்கள். 

அவர்களிடம் இருக்கும் பணத்தின் அளவு கோடியை தாண்டும். ஆயிரம் ரூபாய் எனக்கு வேண்டாம். நான் காரியத்தை செய்துமுடித்த பிறகு ஒரு நல்ல தொகையை எனக்கு கொடுங்கள் என்று கேட்பேன். அப்பொழுது என்ன சொல்லுவார்கள் என்றால் மூன்றாயிரம் ரூபாய் தருகிறேன் என்பார்கள். 

அவர்களின் வீட்டில் இருக்கும் கர்மாவை எடுத்து என் தலையில் சுமக்கும் வேலைக்கு மூன்றாயிரம் ரூபாய் என்றால் நான் எங்கு சென்று என் சுமையை இறக்கி வைக்கமுடியும். நான் செய்துக்கொடுத்துவிடுகிறேன் அதன் பிறகு நல்ல தொகையை தாருங்கள் என்றால் அதற்கே இப்படி என்றால் என்ன செய்வது என்று நான் விட்டுவிடுவேன்.

இப்பொழுது தனிநபர்களுக்கு செல்வதே கிடையாது. என்னுடைய அம்மனே பணத்தை பாேட்டால் தான் அதுவே இறங்கிவந்து செய்யும். இல்லை என்றால் அது திரும்பிகூட பார்க்காது. கடவுளுக்கே பணமா என்று கேட்க தோன்றும். என்ன செய்வது இதன் வழியாக தானே என் பிழைப்பு நடக்கிறது.  அப்படி மாற்றி வைத்திருக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: