Followers

Tuesday, July 15, 2014

கர்மவினை


வணக்கம் நண்பர்களே!
                    ஒருவர் ஏதாே ஒரு ஆபத்தில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் அவரை நாம் காப்பாற்றுவது மனதாபிமானம் என்று சொல்லுவோம். ஆனால் ஒரு ஆன்மீகவாதியாக இருந்தால் அவரை உடனே சென்று தொடாதே என்று சொல்லுவார்.

ஏன் ஆன்மீகவாதி அப்படி சொல்லுகிறார் என்று நீங்கள் நினைக்கலாம். அடுத்தவரை காப்பாற்றுவதற்க்கு தானே ஆன்மீகவாதிகள் பிறரை காப்பாற்றவில்லை என்றால் அவர் எப்படி ஆன்மீகவாதி என்ற கேட்கதோன்றும். 

ஒருத்தர் பிரச்சினையில் இருக்கிறார் என்றால் அவரது கர்ம வினையினால் வந்தது என்று ஆன்மீகவாதிக்கு தெரியும். நல்ல சக்தியுடையவர் கை தொடும்பொழுது அவர் காப்பாற்றப்படலாம் ஆனால் அவர் உடனே தொடமாட்டார். அவரது குருவின் உத்தரவுக்காக காத்திருப்பார். குருவின் உத்தரவு வந்துவிட்டால் அவர் காப்பாற்ற முனைவார்.

ஒருத்தரை காப்பாற்றும்பொழுது அவரின் கர்மவினை காப்பாற்றுபவரிடம் செல்லும் அவரின் கர்மாவும் இவர் சுமக்கவேண்டும். குருவின் உத்தரவு மானசீகமாக வந்துபிறகு இவர் காப்பாற்றினால் அந்த கர்மாவை என்ன செய்யவேண்டும் என்பது குருவிற்க்கு நன்றாக தெரியும். சிஷ்யன் கர்மாவின் பதிவிலிருந்து காப்பாற்றப்படுவான். குருவின் உத்தரவு வராமல் காப்பாற்றினால் சிக்கல் அவனுக்கு ஏற்பட்டுவிடும்.

என்னிடம் நிறைய பேர் உதவி கேட்பார்கள். ஏதாவது ஒரு சிக்கல் வருகிறது. எனக்கு ஏதாவது செய்யுங்கள் என்று வரும்பொழுது நான் உடனே செய்யாதற்க்கும் இது தான் காரணம். 

நீங்கள் ஆன்மீகவாதியாக இருந்தால் பல தடவை யோசித்துவிட்டு செய்வது நல்லது. கர்மவினையை அறுக்க நீங்கள் கற்றுக்கொண்டு விட்டீர்கள் என்றால் யாரை வேண்டுமானாலும் காப்பாற்றலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: