வணக்கம்!
நேற்று ஒரு நண்பரிடம் பேசும்பொழுது என்னிடம் சொன்னார். மனிதன் எப்படி சம்பாதித்தாலும் அதிகப்படியாக பத்து வருடம் நன்றாக வாழ்கிறான் அதன் பிறகு கீழே விழுந்துவிடுகிறான். மனிதன் நல்லது செய்வதை விட பாவத்தை அதிகம் செய்வதால் இப்படி வருகிறது என்று சொன்னார்.
உங்களுக்கு நன்றாக சோதிடம் தெரியும் எப்படிப்பட்ட தசாவாக இருந்தாலும் அது அதிகப்பட்சம் பலனை பனிரெண்டு வருடங்களுக்கு மேல் தராது. அப்படியே போனாலும் முழுப்பலனும் இருபது வருடங்கள் தரலாம். அதன் பிறகு தசா மாறிவிடும் பிறகு வரும் தசா பிரச்சினையை தந்து நமக்கு சோதனையை தந்துவிடும்.
பத்து வருடங்கள் தான் நமக்கு பலனை தரும் அதன் பிறகு பிரச்சினை தரும் என்பதற்க்காக நாம் உழைக்காமல் இருந்துவிடமுடியாது. எதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு கிரகம் முழுமையாக நன்மையை நமக்கு தராது என்பது தெரியும். பாதி நன்மையும் பாதி தீமையும் தரும். நன்மையை நாம் எப்படி ஏற்றுக்கொண்டோமோ அதைப்போல் தீமையும் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்.
தீமை தரும் காலக்கட்டத்தில் நாம் கடவுளின் பக்கம் அதிகம் கவனத்தை செலுத்தினால் அந்த காலம் நமது கர்மவினையை குறைப்பதற்க்காக கடவுள் தந்த ஏற்பாடு என்று எடுத்துக்கொள்ளலாம்.
எப்படிப்பட்ட மோசமான கிரகநிலைகள் வந்தாலும் கவலைப்படாமல் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து பார்த்துவிடவேண்டும் என்று கடவுளின் மேல் பாரத்தை போட்டுக்கொண்டு செயல்படுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
அருமையான பதிவு எனக்கு இதே தான் நடக்கிறது அதற்கு நீங்கள் தெய்வ வழிபாடு கூறி உள்ளீர்கள் அதுவும் எனக்கு தானாகவே நடக்கிறது அதிகமாக ஆலயம் சென்று வருகிறேன் நீங்கள் கூறிய அணைத்து வழிகளையும் பின்பற்றி வருகிறேன் கைவிடபடாமல் காக பட்டு வருகிறேன்.
மிக்க நன்றி
ரவி
Post a Comment