Followers

Monday, November 30, 2015

வீண் வம்பு


ணக்கம்!
          தமிழ்நாடு முழுவதும் சுற்றி வரும்பொழுது ஒரு விசயம் கண்ணில் படும் அந்த விசயத்தை ஏற்கனவே நான் சொல்லிருந்தாலும் மேலும் அதனைப்பற்றி சொல்லவேண்டும் என்று ஒரு சில சம்பவங்கள் நடைபெற்றன.

ஒரு விசயத்தை மக்கள் சொல்லுவதை விட பிளக்ஸ் போர்டு அதிகளவில் ஈர்த்து அந்த விசயத்தை பரப்புகின்றது என்று நினைக்கிறேன். எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அதாவது பிறந்தாலும் வாழ்ந்தாலும் இறந்தாலும் பிளக்ஸ் போர்டு அதிகளவில் பங்குக்கொள்கிறது.

பிளக்ஸ் போர்டு வைத்து அதிகளவில் பிரச்சினைகளை உருவாக்கிகொள்வதை பார்த்திருக்கிறேன். மது பெண்களின் தாலியை அறுப்பதைவிட பிளக்ஸ்போர்டு அதிகளவில் பெண்களின் தாலியை அறுக்கிறது.

பிளக்ஸ் போர்டில் எழுதப்படும் வாசங்களும் அதில் இடம்பெறும் சிங்கம் புலி போன்ற விலங்குகளின் படமும் அதிகளவில் கொலைகளை நடத்த தூண்டுகிறது. இதனை படிக்கும் உங்களுக்கு நன்றாக தெரியும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரியும். இதனைப்பற்றி அதிகம் சொல்லவேண்டாம் என்று நினைக்கிறேன்.

இதனை படிக்கும் நீங்கள் உங்களின் இல்லத்தில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் பிளக்ஸ்போர்டு வைக்கவேண்டாம். ஏன் என்றால் வீணாக வம்பை விலை கொடுத்து வாங்காதீர்கள். நல்ல மகிழ்வோடு உங்களின் குடும்பத்தின் நிகழ்வுகளை நடத்த இது உதவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

திருவாரூர் சரவணா said...

ஒரு கோவில் கட்டும்போது அந்த ஆலயத்தின் மின்சார அமைப்புகள் முழுவதையும் செய்தேன். அது தவிர திருப்பணி வேலைகளை (பழைய கோவிலை இடிக்க ஆரம்பித்ததில் இருந்து கும்பாபிஷேகம் வரை) ஒருங்கிணைக்கும் பணியை செய்திருக்கிறேன். அப்போது இறைவன் எனக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாமா ஐயா.