Followers

Monday, February 12, 2018

தடைகள்


வணக்கம்!
          ஜாதகத்தை அனுப்பிவிட்டு எனக்கு தடைகள் மட்டும் தான் வருகின்றன. அதனை மட்டும் சரிசெய்துவிடுங்கள் என்று சொல்லும் நண்பர்கள் இருக்கின்றனர். ஒரு மனிதன் ஒரு முயற்சியை எடுத்தால் அந்த முயற்சி வெற்றி பெற்றால் அவன் அடுத்த மேம்பட்ட வாழ்க்கைக்கு சென்றுவிடுவான்.

ஒரு ஜாதகத்தில் ராகு கேது மட்டும் நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு தடைகள் ஏற்படுத்துவதில்லை அனைத்து கிரகங்களும் தடைகளை ஏற்படுத்த தான் செய்யும். ஒரு வேலை நடக்ககூடாது என்றால் ஜாதகத்தில் உள்ள ஒன்பது கிரகமும் தடைகளை ஏற்படுத்திவிடும். நாம் அலைந்தது தான் மிச்சம் என்று இருக்கும்.

நாம் எடுக்கின்ற காரியம் தோல்வி அடையும்பொழுது பரிகாரமே இல்லாமல் அதனை வெற்றி பெறவேண்டும் என்றால் அந்த காலக்கட்டத்தில் அதனை செய்யாமல் கொஞ்சகாலம் தள்ளி அதனை செய்தால் போதும். அதற்க்குள்ள காலம் அது அல்ல கொஞ்சகாலம் சென்ற பிறகு நடக்கும்.

ஒரு முயற்சி வெற்றி பெறுவதற்க்கு ஜாதகத்தில் உள்ள அனைத்து  கிரகங்களும் அனைத்து வீடுகளும் துணைபுரியவேண்டும். ஏதோ ஒரு வீடு மற்றும் ஒரு வீட்டால் நடைபெறுவது கிடையாது. அனைத்து வீடுகளும் சம்பந்தப்பட்டு நடக்கின்றது.

தடைகளுக்கு காரணம் பொதுவாக ராகு கேது என்பதை மட்டும் தெரிந்துக்கொண்டு செயல்படாமல் நமக்கு இந்த காலம் சரியில்லை என்பதை புரிந்துக்கொண்டு காலம் தாழ்த்தி செயல்படுத்திக்கொள்ளுங்கள் வெற்றி பெற்றுவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: