Followers

Saturday, February 17, 2018

கேள்வி & பதில்


ணக்கம்!
          வாழ்க்கையில் கடன் என்பது வாங்ககூடாது என்பதை சொல்லிருந்தேன். ஒரு சில நண்பர்கள் ஒரு சாதாரணமான நபர் வீட்டுகடன் மற்றும் கார் கடனை எல்லாம் வங்கியில் பெற்று தானே நாம் கட்டவேண்டியுள்ளது என்று ஒரு நண்பர் கேள்வி அனுப்பியிருந்தார்.

கடன் வாங்காமல் இருக்கமுடியாது. ஏதாே ஒரு விதத்தில் கடன் வாங்கி தான் ஆகவேண்டும். அவசியம் ஏற்பட்டால் மட்டும் கடன் வாங்கிக்கொள்ளுங்கள். நடுத்தரவர்க்கத்தில் இருப்பவர்கள் கடன் இல்லாமல் வாழ்க்கையை செலுத்துவது ஒரு சிரமமான ஒரு காரியமாக தான் இருக்கும்.

வீட்டை வாங்குவது கடன் இல்லாமல் வாங்கினால் பெரிய காரியமாக இருக்கும் ஆனால் என்ன செய்வது கடன் வாங்கி தான் வீட்டை வாங்க வேண்டும் என்றால் அப்படியே செய்துக்கொள்ளவேண்டியது தான் வேறு வழி இல்லை என்றால் செய்யுங்கள்.

கடன் வாங்குவது நமக்கு ஒரு தீயகிரகங்களின் தசா அல்லது மறைவுஸ்தானத்தின் தசாவில் கடன் வாங்குவது ஒரு விதத்தில் நல்லதை செய்யும். நமக்கு வரும் பிற இன்னல்களை தவிர்க்க கடன் வாங்கிக்கொள்ளலாம்.

கடன் நமக்கு தலைக்கு மேல் சென்றுவிடகூடாது. ஒரே கடனாகவே வாங்கிக்கொண்டு சென்றால் அது உங்களை வீழ்த்திவிடும். அதற்கு பிறகு என்ன பரிகாரம் செய்தாலும் அதில் இருந்து மீறி வரவேமுடியாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

KJ said...

Sir, Share Market il Vetri Pera enna Amaipu Vendum??