Followers

Wednesday, February 28, 2018

மனிதர்களை கொல்லும் ஆன்மீகம்


வணக்கம்!
          பொதுவாகவே மனிதர்களுக்கு ஆன்மீகத்தின் மீது ஈடுபாடு வரச்செய்யும். தற்சமயம் கொஞ்சம் அதிகமாகவே இது இருக்கின்றது என்று சொல்லலாம். ஆன்மீகத்தில் ஈடுபட்டு சாதகம் செய்யவேண்டும் என்று விருப்பம் இருக்கும்.

ஜாதக கதம்பம் படிக்கும் அனைவரும் கொஞ்சம் அதிகமாகவே இதில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனை வரவேற்றலாம் ஒரு சில கருத்தை மட்டும் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன்.

ஆன்மீகத்திற்க்கு உங்களுக்கு வழிகாட்ட ஒரு நல்ல குரு கண்டிப்பாக வேண்டும். குரு இல்லாமல் ஆன்மீகம் சரிப்பட்டு வராது. அதே நேரத்தில் தானாகவே ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையவேண்டும் என்று தான் பலர் நினைப்பார்கள். இது ஒரு தவறான ஒன்று.

ஒரு சிலர் மாலை அணிந்துக்கொண்டு ஐயப்பன் முருகன் கோவிலுக்கு எல்லாம் சென்றுவருவார்கள். வருடதோறும் இதனை செய்யும் பக்தர்களும் இருக்கின்றனர். இவர்கள் அந்த நேரத்தில் மிகுந்த ஈடுபாட்டோடு அதில் இணைந்து செயல்படுவார்கள்.

குரு இல்லாத ஆன்மீகம் என்ன செய்யும் என்றால் பாதியில் முடிவடையும். குரு இல்லாமல் ஆன்மீகத்தில் இறங்கினால் கண்டிப்பாக உங்களுக்கு ஹர்ட்அட்டாக் வாய்ப்பு அதிகமாக இருக்கும். இதயநோயால் மரணம் வருவதற்க்கு அதிகவாய்ப்பு இருக்கின்றது.

என்ன இப்படி பயமுறுத்துகிறீர்கள் என்று நினைக்கலாம். உண்மையான ஒன்று. இதயம் அதிக உணர்ச்சிவயப்படும். நான் பார்த்தவரையில் மாலை போடுகின்றவர்கள் குரு இல்லாதவர்கள் அனைவரும் திடீர் மரணம் எய்துகின்றனர்.

இதயத்தோடு இப்படிப்பட்ட ஆன்மீகம் நின்றுவிடும். மரணம் வந்துவிடுகின்றது. உங்களுக்கு அருகில் மற்றும் தெரிந்தவர்களை எல்லாம் கொஞ்சம் சிந்தனை செய்து பார்த்தால் அவர்களின் இறப்பில் உள்ள விசயம் என்ன என்பது புரியவரும். இதயத்திற்க்கு மேலும் செல்லவேண்டும் இதனை எல்லாம் குரு தான் பயிற்றுவிப்பார்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: