Followers

Monday, July 15, 2019

தீர்வுகள் பகுதி 4


வணக்கம்!
          ஒரு ஜாதகத்தில் லக்கனம் என்பது மிக முக்கியம் என்பது உங்களுக்கு தெரியும். லக்கனத்தில் பாவக்கிரகங்கள் இருந்தால் மிக மிக கடினம் என்பது உங்களுக்கு தெரியும் அதாவது வாழ்க்கை நிறைய போராட்டங்களை உங்களுக்கு கொடுக்கபோகின்றது என்று அர்த்தம்.

லக்கனாதிபதி நன்றாக இருந்தால் பெரும்பாலும் போராட்டம் குறைந்து நல்ல வாழ்க்கையை கொடுக்கும். லக்கனாதிபதி மறைவு ஸ்தானத்திற்க்கு சென்றால் அது கடுமையாகவே இருக்கும் என்று சொல்லலாம். மறைவுக்கு செல்லும்பொழுது லக்கனாதிபதியால் சரியாக செயல்படமுடியாது.

உங்களின் லக்கனத்தில் புதன் மற்றும் குரு இருந்தால் உங்களின் தோஷம் எல்லாம் குறைந்துவிடும் என்று சொல்லுவார்கள். இந்த இரண்டு கிரகமும் உங்களின் ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷத்தையும் போக்கும் தன்மையில் இருக்கும் என்று சொல்லுவார்கள்.

லக்கனத்தில் பாவ கிரகங்கள் இருக்கின்றது இதற்கு தீர்வு என்ன என்று கேட்கலாம். பெரும்பாலும் எல்லா விசயத்திலும் நீங்கள் முன்னாடி சென்று நிற்ககூடாது. புதன் கிரகம் லக்கனத்தில் இருந்தால் தோஷம் இருக்காது என்கின்றார்கள் அல்லவா. மாமனை குறிக்கும் கிரகம் புதன். உங்களின் தாய்மாமன் அதன்பிறகு உங்களின் துணையின் தந்தை இவர்களை வைத்து நீங்கள் எல்லா காரியமும் செய்யலாம்.

குரு கிரகம் என்பதையும் சொல்லியுள்ளார்கள். ஒரு ஆன்மீக குருவின் துணைக்கொண்டு நீங்கள் அனைத்து தோஷத்தையும் போக்கிக்கொள்ள முடியும் என்பதால் ஒரு ஆன்மீக குருவின் சொல்படி நடந்துக்கொள்ளுங்கள்.கண்டிப்பாக மேலே சொன்னது இரண்டு பேரும் மனிதர்கள் இவர்களிடம் நடந்துக்கொள்வது என்பது உங்களின் புண்ணியத்தில் தான் இருக்கின்றது. நாம் மனிதர்களோடு இணக்கமாக வாழ்வது சிக்கலை ஏற்படுத்தும் என்பது கலியுக விதி. 

இவர்களின் சொல்பேச்சை கேட்டு நீங்கள் நடந்துக்கொள்ளலாம் அல்லது வழிபாட்டு முறை என்று வந்தால் இரண்டு கிரகத்திற்க்குரிய தேவதை என்று கொடுத்து இருப்பார்கள் அவர்களை நீங்கள் வணங்கினாலும் ஒரளவுக்கு சரியாகிவிடும்.

உங்களின் ஜாதகத்தில் உள்ள தோஷத்தை போக்கும் இரண்டு விதிகளை சொல்லிருக்கிறேன். சோதிடவிதியும் இது தான் லக்கனத்தில் புதன் குரு இருந்தால் தோஷம் அடிப்படும் என்பது இதனை கொஞ்சம் அனுபவத்தில் கலந்து சொல்லிருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: