Followers

Wednesday, July 3, 2019

தீர்வுகள்


வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் எந்த நிலையில் கிரகங்கள் இருந்தாலும் அதாவது மோசமான பலனை தரக்கூடிய நிலையில் கிரகங்கள் இருக்கும்பொழுதும் உங்களின் சாமர்த்தியமான திறமையால் அதனை வென்று சென்றுவிடமுடியும்.

கிரகங்கள் தான் நம்மை ஆட்டி படைக்கின்றது இதில் இருந்து எப்படி திறமையாக செயல்படமுடியும் என்று கேட்கலாம். கண்டிப்பாக பொறுமையாக இருந்து அதோடு திறமையாக இருந்தால் இதில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

பரிகாரம் என்பதை மட்டும் செய்துக்கொண்டு தான் இதனை கடக்கவேண்டும் என்பதில்லை. நாம் நிறைய வழிபாட்டு தலங்கள் மற்றும் புண்ணியதீர்த்தங்களில் சென்றாலே அதற்கான வழிகள் உங்களுக்கு கிடைத்துவிடும்.

நம்மிடம் கிடைக்கும் காெஞ்ச பணத்தையாவது சேமித்து வைத்துக்கொண்டு அதனை வைத்து உங்களால் முடிந்த கோவிலுக்கு சென்று வந்தாலே போதுமானதாகவே இருக்கும். உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களை அழைத்துக்கொண்டு செல்ல வழி இல்லை என்றாலும் நீங்கள் மட்டும் சென்று வந்தாலே போதுமானதாகவே இருக்கும்.

உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அதில் உள்ள கிரகங்களுக்கு தகுந்த மாதிரியாக உங்களின் வாழ்க்கை மற்றும் உங்களின் நடத்தையும் மாற்றிக்கொண்டு வாழலாம். ஜாதகத்தில் உள்ள பல விசயங்களை நீங்களே அலசி ஆராய்ந்து வழிபட்டுக்கொள்ளலாம். அதனைப்பற்றி இனி பதிவுகளில் கொஞ்சம் தருகிறேன். அதுவே பல வழிகள் உங்களுக்கு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: