Followers

Tuesday, July 16, 2019

பிறரின் ஆலோசனை


வணக்கம்!
          நம்மிடம் ஒரு குணம் இருக்கும் என்ன என்றால் நாம் நடந்துக்கொண்டு இருப்பது மிகச்சரியாக தான் நடந்துக்கொண்டு இருக்கிறோம். நாம் செய்வது மிக சரியாக செய்துக்கொண்டு இருக்கிறோம் என்ற ஒரு நினைப்பில் நடந்துக்கொண்டு இருப்போம்.

ஊரில் மிக விபரமாக நடந்துக்கொண்டு மிக பெரியளவில் வந்தவர்களும் இருப்பார்கள். அவர்கள் செய்தது எப்படி மிகச்சரியாக வந்துவிட்டார்கள் என்று நாம் பார்க்கும்பொழுது தான் நமக்கு இவ்வளவு தான் தெரிந்து இருக்கின்றது என்று தோன்றும்.

இந்த உலகத்தில் தெரியாமல் இருப்பவர்கள் தான் நிறைய சாதிப்பவர்கள் எப்படி என்றால் அவர்கள் அடுத்தவர்களிடம் கேட்டுக்கொண்டே இருப்பதால் அவர்கள் சாதிப்பார்கள். அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் பிறரிடம் நன்றாக கேட்டு தெரிந்துக்கொண்டு அவர்களுடைய அறிவை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள்.

உங்களிடம் சொல்லுவது நமக்கு தான் எல்லாம் தெரியுமே நம்மிடம் தான் எல்லாம் இருக்கின்றதோ நம்மை மிஞ்சுவதற்க்கு ஆள் இல்லை என்ற ஒரு நினைப்பு இருக்ககூடாது. என்னடா சொல்ல வர்றார் என்று கேட்கலாம் முடிந்தவரை அறிவை பிறர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டே இருங்கள்.

உங்களின் வளர்ச்சி மிகச்சரியாக இருக்கின்றதா அல்லது நீங்கள் செய்துக்கொண்டு இருப்பது நல்லதா என்று கேட்டுக்கொண்டு செயல்படுங்கள். பல நேரங்களில் இது உங்களுக்கு நன்றாக கை கொடுக்கும். நாம் செய்தது மற்றும் செய்துக்கொண்டு இருப்பது மிகச்சரியான ஒன்று என்று வாழ்க்கையை இழந்தவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர் அதனால் நீங்கள் இந்த விசயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையோடு செயல்பட்டுக்கொண்டு இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: