வணக்கம்!
ஒருவரின் வார்த்தைகள் அவரை உயர்த்தும். ஒருவரின் வார்த்தையை பிரயோகப்படுத்தும்பொழுது அது எதிர்மறையான ஒரு எண்ணத்தை வரவழைப்பது போலவே வார்த்தைகள் இருக்ககூடாது. வார்த்தைகள் நன்றாக இருக்கவேண்டும்.
எங்களுக்கே வருகின்றோம் நாங்கள் ஒரு ஜாதகத்தை பார்த்தால் உடனே உங்களுக்கு பிரச்சினை வரப்போகின்றது தோஷம் இருக்கின்றது அங்கு பிரச்சினை இதில் பிரச்சினை என்று சொல்லிக்கொண்டே இருப்போம்.
பிரச்சினை என்று நாங்கள் சொல்லுவதால் அது பிரச்சினையாகவே உங்களுக்கு முடிந்துவிடும். முக்கால்வாசி சோதிடர்கள் பீடை பிடித்தவர்களாகவே இருப்பதற்க்கு காரணமாக இருப்பது அவர்கள் பிறரின் கர்மாவை பார்த்த காரணத்தால் வருவதில்லை அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளால் வந்தது.
நமது ஜாதகத்தால் வந்த கர்மாவிட நமது வார்த்தைகள் பயன்படுத்துவதால் வந்த கர்மா தான் அதிகமாக இருக்கும். எந்த நேரமும் தவறான வார்த்தைகள் பயன்படுத்தவதால் வந்த கர்மா அதிகமாக நமக்குள் இருக்கும்.
நீங்கள் பேசும்பொழுது முடிந்தவரை எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க பாருங்கள். உடனே உங்களுக்கு பலன் தரவில்லை என்றாலும் போக போக சரியாகிவிடும். நல்ல வார்த்தைகள் நல்ல வாழ்க்கையை உருவாக்கும் என்பதை போக போக தெரிந்துக்கொள்வீர்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment