Followers

Monday, November 25, 2019

கெட்டகாலங்களில்


வணக்கம்!
         ஒருவருக்கு கெடுதல் நேரம் வந்தால் அவர்க்கு நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் உடல்நிலை பாதிப்பு அதனால் மருத்துவசெலவு வாகன விபத்து அல்லது வாகன பழுது அதனால் ஏற்படும் செலவு இறப்பு ஏற்படுதல் அல்லது இறப்பு சம்பந்தப்பட்ட செலவு போன்றவை முக்கியமாக இருக்கும்.

பெரும்பாலும் விரைய வீட்டை சம்பந்தப்பட்டே அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும். எதனை எடுத்தாலும் விரையத்திற்க்கு கொண்டு சென்றுவிடுவது உண்டு. ஏழரைச்சனி என்று சொல்லக்கூடிய காலத்தில் விரைய வீட்டிற்க்கு சனி வரும்பொழுது இது அதிகமாகவே நடைபெறுகின்றது.

அவமானங்களை கொடுக்ககூடிய நிகழ்வுகளும் நடைபெறும் இது எட்டாவது வீட்டை சம்பந்தப்பட்டே நடக்ககூடிய ஒரு நிகழ்வுகளாகவே இருக்கும். இதுவும் அஷ்டமசனி ஏழரைச்சனியிலும் நடக்கும் அதுபோலவே கெட்ட தசாவிலும் நடக்கும்.

இது எல்லாம் கெட்ட நேரத்தில் நடந்தால் நாம் தவிர்ப்பதற்க்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்க தோன்றும். முதலில் எளிமையாக நடந்துக்கொள்ளவேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் தனக்கு இப்படிபபட்ட காலம் இருக்கின்றது அதனால் அனைவரும் பொறுமையாக இருக்கவேண்டும் இந்த காலம் மாறிவிடும் என்று சொல்லவேண்டும்.

பல குடும்பங்களில் ஏழரைச்சனி காலக்கட்டத்தில் பிரிவினையை உருவாக்கிவிடுகின்றது. குடும்பத்தில் பொறுமையை கடைபிடிக்க சொல்லவேண்டும். பத்து வார்த்தைக்கு ஒரு வார்த்தை பேசுவது போன்ற மனநிலை உருவாக்குவது நல்லது.

நீங்கள் சொல்லுவதை யாரும் கேட்க மாட்டார்கள். வாழ்க்கையில் உங்களுக்கு கல்வி கூடங்கள் தராத ஒரு நல்ல கல்வியை கஷ்டகாலங்கள் உங்களுக்கு கற்பித்துக்கொடுக்கும். இதனை உங்களுக்கு நல்ல அனுபவமாக எடுத்துக்கொள்ளலாம்.

வழிபாடுகள் பரிகாரங்கள் பயன் கொடுக்கும். பரிகாரங்கள் செய்வதும் நல்லது உங்களுக்கு ஏற்படும் செலவுகள் குறைவதற்க்கு ஒரு நல்ல வழி இதனால் கிடைக்கும். உங்களின் உடல்நிலையிலும் ஒரு பாதுகாப்பிற்க்கு ஒரு நல்ல வழி என்பதால் இதனையும் மேற்க்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: