Followers

Sunday, October 28, 2012

ஆன்மீக அனுபவங்கள் 11



வணக்கம் நண்பர்களே ஆன்மீக அனுபவத்தில் உங்களின் துணைவரை உங்களின் குருவாக ஏற்றுக்கொண்டு அதன் படி உங்களின் ஆன்மீக வாழ்க்கையை வாழுங்கள் என்று சொல்லிருந்தேன் இதற்கு எந்த விதத்திலும் எனக்கு எதிர்ப்பு வரவில்லை. நண்பர் சிவக்குமார் கிட்டதட்ட அந்த இடத்திற்க்கு வந்தார். அவரை பாராட்டலாம். 

உண்மையில் ஆன்மீக குருவாக துணைவரை எடுக்கமுடியுமா என்றால் சந்தேகமே ஏன் என்றால் ஒரு பெண்ணின் கணவர் என்ன தவறு செய்தாலும் அதை வெளிக்காட்டாமல் அவர நல்லவர் என்று தான் சொல்லுவார். இப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி கணவரை குருவாக ஏற்றுக்கொள்ள முடியும். 

நமக்கு வரும் குரு என்பவரை காட்டும் இடம் சோதிடத்தில் ஒன்பதாவது வீடு. ஒன்பதாவது வீட்டு அதிபதி ஏழாம் வீட்டில் இருந்தால் மட்டுமே அவரின் கணவர் அந்த பெண்ணிற்க்கு குருவாக வருவார் அல்லது கணவர் மூலம் குரு அமைவார் மற்றப்படி வேறு யாருக்கும் குருவாக அவரின் கணவர் வரமுடியாது.

உயர்நிலையில் செல்பவர்களுக்கு ஆன்மீகத்தில் குரு கண்டிப்பாக வேண்டும் ஆனால் குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அவசியமான ஒன்று கிடையாது.

ஒரு பெண் என்பவள் சக்தியின் வடிவம் தான் இந்த கருத்து அனைவருக்கும் தெரியும் ஆனால் அதை நடைமுறையில் பயன்படுத்தவில்லை.

ஒரு பெண் நினைத்தால் ஒரு சக்தியை எந்த வித குருவும் இல்லாமல் எடுக்கமுடியும். அதற்கு அந்த பெண் அந்த அளவுக்கு உழைக்க வேண்டும். பொதுவாக அனைவரும் ஆன்மீக தேடுதல் உள்ளவர்கள் தான் ஆனால் நமது தேடுதலில் ஈடுபடும் போது ஒரு சில தவறு செய்கிறோம். அந்த தவறை நீங்கள் அறிந்தால் அனைவரும் எளிதில் அந்த சக்தியை எடுக்கலாம். 

மனிதரிகளில் உள்ள குணத்தில் தீங்கான ஒரு குணம் இருக்கிறது. ஈகோ. இந்த ஈகோவைவிட்டால் எளிதில் அந்த சக்தி உங்களிடம் வந்துவிடும். நான் இவருக்கு பிறந்து இருக்கிறேன் எங்கள் அப்பா பெரிய ஆள். என் குடும்பம் சமுதாயத்தில் உயர்நத குடும்பம். நான் மிகப்பெரிய பன்னாட்டு கம்பெனியில் வேலை செய்கிறேன். நான் படித்த படிப்பு அவ்வளவு பெரியது. எனக்கு சொத்து பல கோடி உள்ளது எனது அந்தஸ்து இப்படி ஏகாபட்ட ஈகோவுடன் கோவிலுக்கு போனாலும் வீட்டில் உள்ள பூஜை அறைக்கு சென்றாலும் இந்த நினைப்பு இருப்பதால் உங்களால் ஆன்மீகத்தில் முன்னேற முடியவில்லை. இந்த நினைப்பை கொஞ்ச கொஞ்சமாக விடும் பட்சத்தில் கடவுள் உங்களை நாடிவருவார்.

உடல் உழைப்பில் அனைத்தும் உள்ளது. அந்த காலத்தில் ஏன் மலை உச்சியில் கோவிலை கட்டி வைத்தான். பல மலைகளை கடந்து சென்று தரிசனம் செய்யுங்கள் என்று எதற்கு கோவிலை காட்டிற்க்குள் வைத்தான் என்று நீங்கள் நினைத்தால் உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். 

நீங்கள் மலை ஏறும் போது உங்களிடம் இருக்கும் அனைத்து சக்திகளும் செலவாகும். உங்களின் உடம்பை கஷ்டபடுத்திக்கொண்டு ஏறும்போது உங்களிடம் இருக்கும் அனைத்து தீயகுணங்களும் எரிந்துவிடும் கடைசியில் இறைவனை காணும் போது உங்களால் சரணடைய மட்டுமே முடியும். வேற எந்த எண்ணங்களும் உங்களுக்கு தோன்றாது.

நல்ல வழியை சொல்லிவிட்டேன் உங்களின் கையில் தான் உள்ளது. நீங்கள் இதனை செய்து உங்களின் உழைப்பால் உங்கள் குடும்பத்தையும் உங்களின் உறவினர்களின் குடும்பத்தையும் மற்றும் உங்களின் வீட்டிற்கு பக்கத்தில் இருப்பவர்களின் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வழிமுறைகளை என்னை தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


1 comment:

R.Srishobana said...

வணக்கம்,
வெளியூர் சென்றுவிட்டதால் பதிவுகளை இன்று தான் படித்தேன்...தாங்கள் இப்பதிவில் கூறியபடி நடந்தால் மிகவும் மகிழ்வேன்...ஏனெனில் எனக்கு பாக்கியாதிபதி 7ல் அமர்ந்திருக்கிறார்...
இன்றைய பதிவை படித்தவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்...பொதுவாக ஜோதிடத்தில் நல்ல வாழ்க்கை துணை அமையும் என்பார்கள் நல்ல குருவாகவும் அமைவார்கள் என்பது புது தகவல்...உண்மையில்,இத்தருனத்தை என்னால் நம்பவே முடியவில்லை...மிக்க நன்றி...