Followers

Saturday, October 13, 2012

சுவாமி திருவீதி உலா



சுவாமி திருவீதி உலா வருவது ஏன் என்று இப்பதிவில் பார்க்கலாம். சுவாமியால் இந்த உலகையோ சுற்றி பார்க்க முடியும் அப்படி இருக்கும் பட்சத்தில் ஏன் நாம் திருவிழா காலங்களில் சுவாமியை திருவீதி உலா என்று வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீதிகளிலும் சாமியை கொண்டுவருகிறார்கள். 

இது எல்லாம் கோவில்களிலும் நடைபெறும் ஒரு நிகழ்ச்சி தான். ஏன் என்றால் திருவிழா நடைபெறும் காலங்களில் சுவாமியை விசேஷமாக அலங்காரம் செய்வார்கள். அதை பார்க்க ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.

நம்மில் சிலபேர் இருப்பார்கள் அதனை ரசிக்க தெரியாது. நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் முதலில் நல்ல தரிசனம் செய்ய வேண்டும் ஒவ்வொன்றாக சாமியின் தரிசனத்தை ரசிக்க ஆரம்பித்தால் தான் உங்களால் ஆன்மிக வாழ்வில் முன்னேற்றம் அடையமுடியும்.

சில வீடுகளில் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருக்கலாம். சில பேர் உடம்பு முடியாத நிலையில் இருக்கலாம் அவ்வாறு இருக்கும் போது அவர்கள் திருவீதி உலா வரும்போது அந்த பரபொருளை பார்க்க முடியும் அதனால் தான் சுவாமியை திருவீதி உலா நிகழ்ச்சியை வைத்து இருக்கிறார்கள். 

இன்றைய நிலையில் பார்த்தீர்கள் என்றால் ஒவ்வொரு கோவிலும் திருவீதி உலாவில் பட்டாசை போட்டு கொளுத்தி ஒரே புகை மண்டலமாக மாற்றிவிடுகிறார்கள் தெருவில் இருக்கும் இளைஞர்கள் நன்றாக குடித்துவிட்டு ஒரே ஆட்டம் தான் வீதி உலா மாறி அது சண்டை சச்சரவு உலாவாக ஒரு சில இடங்களில் நடைபெறுகிறது.எந்த நிகழ்ச்சியையும் அமைதியாக செய்யுங்கள். அப்பொழுது ஆனந்தம் அடையலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: