Followers

Monday, October 29, 2012

ஆன்மீக அனுபவங்கள் 12



வணக்கம் நண்பர்களே ஆன்மீக அனுபவத்தில் இப்பதிவில் பார்க்கபோவது தூக்கத்தைப் பற்றிதான் என்னடா ஆன்மீகத்தில் தூக்கத்தை எல்லாம் சொல்கிறானே என்று நினைக்க தோன்றும் இப்பதிவை படித்து முடித்த பிறகு மனிதனுக்கு அவசியம் எது என்று தோன்றும்.

அவசர உலகத்தில் நாம் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். உலகம் எப்பொழுதும் போல் போய் கொண்டு தான் இருக்கிறது. மனிதர்கள் தான் அவசரமாக மாறிவிட்டார்கள்.  இந்த அவசர உலகத்தில் ஏதோ ஒன்றுக்காக மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான். அவனுக்கு நிம்மதி என்பதே அவன் தூங்கின்ற நேரத்தில் தான் இருக்கிறது ஆனால் அந்த மனிதன் இன்று நிம்மதியாக தூங்கிறான என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஏன் என்றால் பொழுது விடிந்ததில் இருந்து இரவு வரை ஒருவன் உழைத்துக்கொண்டே இருக்கிறான் அவன் வீட்டிற்க்கு போனாலும் அங்கும் அவனுக்கு பிரச்சினை தான் முன்னாடி நிற்கிறது. இன்று பல பேருக்கு குடும்பமே பிரச்சினை ஆகிவிட்டது. இந்த நிலையில் அவன் எப்படி நிம்மதியாக தூங்குவது. 

ஒருவன் நன்றாக தூங்கினால் தான் அவன் வாழ்நாட்கள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கமுடியும். ஒருவன் இரவில் நன்றாக தூங்கினால் மறுநாள் புத்துணர்வோடு வேலையில் ஈடுபட முடியும். இவ்வாறு ஒவ்வொரு இரவிலும் மனிதன் நன்றாக தூங்கவேண்டும்.

இன்றைக்கு மனிதனுக்கு நல்ல வசதி வாய்ப்பு இருக்கிறது ஆனால் அவனால் நன்றாக தூங்கமுடியவில்லை. A/c அறையில் படுத்தாலும் அவனுக்கு தூக்கம் வரமாட்டேன்கிறது.

ஏதாவது ஒரு கவலை அவன் மனதிற்க்குள் வந்து அவனை பாடாய்படுத்துகிறது. இதற்காக தான் மனிதர்களில் பலபேர் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். குடித்த பிறகு தூக்கம் வருகிறது என்று எண்ணி குடியை ஆரம்பிக்கிறார்கள். அதுவே அவர்களுக்கு எமனாக மாறுகிறது.

உண்மையில் நன்றாக தூங்கும் போது மட்டுமே ஒருவனுக்கு நிம்மதி என்பது வரும் அப்படி தூங்காமல் இருந்தால் அவனுக்கு நிம்மதி என்பது ஒரு காலமும் வராது. நீங்கள் நன்றாக தூங்கினால் உங்களுக்கு உடல்நிலையில் கோளாறு ஒருபோதும் வராது நோயற்ற வாழ்வு நீங்கள் வாழலாம்.

சோதிடத்தில் நமக்கு தூக்கத்தை காட்டும் இடம் பனிரெண்டாவது வீடு அந்த வீடு பாதிக்கப்பட்டால் நமக்கு தூக்கம் என்பது பிரச்சினை தான். மனதிற்க்கு காரகன் சந்திரனும் ஒருவனுக்கு நன்றாக இருக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே ஒருவனுக்கு நிம்மதியான தூக்கம் வரும். 

நன்றாக தூங்க வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும். நீங்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு சக்தி உபாசாகாரக மாறவேண்டும். அப்பொழுது மட்டுமே ஒருவனுக்கு நிம்மதியான தூக்கம் வரும்.

நான் அந்த சக்தியை உபாசனை செய்த பிறகு எனக்கு நிம்மதியான தூக்கம் வருகிறது. நன்றாக தூங்குவேன். என்னுடன் அறையில் இருப்பவரும் என்னால் நன்றாக தூங்குகிறார். இதை நீங்கள் எடுத்துக்கொண்டு உங்களையும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும் நன்றாக தூங்க வையுங்கள். நீங்களும் நிம்மதி அடைந்து உங்களிடம் இருப்பவரையும் நிம்மதி அடைய செய்யுங்கள் வாழும் போதே கடவுளின் அனுகிரகத்தில் வாழ வேண்டும் அது தான் உயர்ந்த வாழ்வு.

குழந்தைகள் பிறந்த நேரத்தில் பார்த்தால் அது நன்றாக தூங்கும். அது விழித்து பார்க்கும் போது அது அவ்வளவு உற்சாகமாக மாறிவிடும். அது விழித்து இருக்கும் நேரம் எல்லாம் அது அன்பை உங்கள் மீது பொழிந்து கொண்டே இருக்கும். கடவுளும் குழந்தையும் ஒன்று தான் என்பது அப்பொழுது மட்டுமே புரியும். அதைபோல் மனிதனின் இறுதி நாட்களில் மனிதன் நன்றாக தூங்குவான். ஏன் அவ்வாறு தூங்கிறான் கடவுள்கிட்ட போகபோகிறான் என்று அர்த்தம். கடவுளின் தன்மையில் தூக்கம் எவ்வளவு முக்கியம் என்று இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அனைத்து மதங்களும் இறந்த பிறகு சொர்க்கம் நரகம் என்று உங்களை பயமுறுத்துகிறது. நீங்கள் வாழுகின்ற வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுங்கள். நன்றாக இரவில் தூங்கி நிம்மதியான வாழ்க்கையை வாழுங்கள் அதுவே போதும் என்று நினைக்க தோன்றும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


1 comment:

daran said...

நல்ல அருமையான தகவல். சில பேர் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினால் போதும். அதற்க்கு மேல் தூங்குவது சோம்பேறித்தனம். வாழ் நாளில் ஒரு பகுதியை தூங்கி வீணாக்குகிறோம் என்று பிரச்சாராம் செய்கின்றனர். சாதித்தவர்கள் எல்லாம் 3 or 4 மணி நேரம் தூங்கியவர்கள் என்று சொல்ல கேட்டு இருக்கிறேன். அதை பற்றி நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள்? -தாமோதரன்