Followers

Tuesday, October 16, 2012

நவராத்திரி ஸ்பெஷல்



புரட்டாசி மாதம் வரும் பண்டிகைகளில் முக்கியமானது நவராத்திரி. நவராத்திரி என்பது ஒன்பது இரவுகள் என்று பொருள் 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா பத்தாம் நாளான விஜயதசமியுடன் நிறைவு பெறுகிறது.

மகிஷன் என்னும் அசுரன் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் அதிக தொல்லை கொடுத்துவந்தான். அவனை அழிப்பதற்காக அன்னை பராசக்தி 9 நாட்கள் தவம் இருந்து அனைத்து தேவர்களின் சக்தியையும் ஒருசேரப் பெற்று பத்தாவது நாள் அவனை வதம் செய்தாள். அசுரனை கொன்ற பராசக்தியின் இந்த வெற்றியை கொண்டபடுவதுதான் நவராத்திரி.

நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளிலும் 2 முதல் 10 வயது வரையுள்ள கன்னிப் பெண்களை குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, துர்கா, சுபத்ரா, சாம்பவி என்று தேவியின் அம்சங்களாக பாவித்து வழிபடுகிறோம்.

ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் செய்யப்பட்ட கொலு பொம்மைகளை வைத்து வணங்குபவர்களுக்கு சகல சுகங்களையும் பாக்கியத்தையும் அளிப்பேன் என்று அம்பிகை கூறுவதாக தேவி புராணத்தில் உள்ளது. 

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கா வழிபாடு ஆகும். இவள் வீரத்தின் அதிபதி துர்க்கம் என்ற சொல் அகழி என்று பொருள்தரும். கோட்டைக்குள் இருப்பவர்களை காக்கும் அகழி போன்று தன்னை சார்ந்த பக்தர்களை காப்பதால் இவள் துர்க்கை என பெயர் பெறுகிறாள்.

நடு மூன்று நாட்கள் திருமகளாக அலை மகளாக விளங்கும் லட்சுமியின் வழிபாட்டிற்க்கு உரியவை இவள் தான் செல்வத்தின் அதிபதி.

நவராத்திரி விழாவின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாட்டிற்க்கு உரியவை இவள் கல்விக்கு அதிபதி. ஆயக்கலைகள் 64 யும் தருபவள்.

நம் நாட்டில் பெண்களை சக்தியின் அம்சமாக நினைக்கிறோம் எனவே பராசக்தியைப் போற்றும் இந்த விழா வட இந்தியாவில் தசரா என்று அழைக்கப்படுகிறது. நவராத்திரி விழாவின்போது அர்ச்சனைக்கு வில்வ இலை அல்லது துளசி இலை பயன்படுத்த வேண்டும். 

வன்னிமரம் துரக்கையின் அம்சம் என்பதால் நவராத்திரி விழாவில் வன்னிமரத்தை வணங்கலாம். நவராத்திரி விழாவின் நைவேத்தியமாக முதல் மூன்று நாட்கள் எலுமிச்சை சாதமும் அடுத்த மூன்று நாட்கள் சர்க்கரை பொங்கலும் கடைசி மூன்று நாட்கள் வெண்பொங்கல் தயிர் சாதமும் தயார் செய்யலாம். பூஜையின்போது அனைத்து அம்மன் பாடல்களையும் பாடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: