Followers

Saturday, October 27, 2012

அன்னாபிஷேகம்



வணக்கம் நண்பர்களே ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முதல் பௌர்ணமி அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறும். 

நீராடலில் மகிழ்பவன் ஈசன். அவரது பணிவிடையில் நீராடலுக்கு முக்கியதுவம் உண்டு. பஞ்சபூதங்களும் அவனுள் ஒன்றியுள்ளன. ஐந்து முகங்களுடன் விளங்கும் ஈசனுக்கு நல்லெண்ணெய்,பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், நெய் , பால், தயிர், தேன், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழ சாறு, இளநீர், சந்தனம் ஆகிய 11 பொருட்களால் அபிஷேகம் செய்வர்.

அபிஷேகத்தின் போது சிவபெருமானின் பெருமைகளை போற்றும் வகையில் வேதம் ஓதுவர். இதை ஸ்ரீ ருத்ரம் என்பார்கள். ஸ்ரீ ருத்ரம் 11 பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் ஏனென்றால் சிவபெருமான் 11 வடிவம் கொண்டவர். 

ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னத்தால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வர். இதையே அன்னாபிஷேகம் என்பார்கள். லிங்கத்துடன் நிற்காமல் ஆவுடையிலும் பரவி அன்னவடிவில் காட்சி அளிப்பான் ஈசன். 

கருவறை வாசல்படி வரை அன்னத்தால் படிக்கட்டு அமைப்பர். லிங்கத்தில் அவனது உருவம் வெளிப்படுவதற்க்காக எள்ளு உருண்டை, வடை, அப்பம் ஆகியவற்றால் கண் காது மூக்கு முதலான உறுப்புகளை சிந்திப்பர்.

படிக்கட்டுகளில் கொலு வைப்பது போல் காய் கனிகள் பலவற்றை அடுக்கி விசேஷ தீபராதனை நடத்தி சிவபெருமானை வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த அன்னாபிஷேகம் வருகிற 29 ந் தேதி மாலை 5 மணி முதல் 8 மணி வரை அனைத்து சிவாலயங்களிலும் நடைபெறும்.

உலக உயிர்களுக்கு அன்னத்தை படைத்த நாள் தான் இது. உங்கள் அருகில் இருக்கும் சிவலாயம் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு ஈசன் நல்லதை மட்டும் தருவார். அயல்நாட்டில் உள்ளவர்கள் அருகில் கோவில் இல்லாத பட்சத்தில் ஈசனை மனதில் தியானியுங்கள் அது போதும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: