Followers

Monday, October 29, 2012

கேள்வி & பதில்கள்



நல்ல அருமையான தகவல். சில பேர் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினால் போதும். அதற்க்கு மேல் தூங்குவது சோம்பேறித்தனம். வாழ் நாளில் ஒரு பகுதியை தூங்கி வீணாக்குகிறோம் என்று பிரச்சாராம் செய்கின்றனர். சாதித்தவர்கள் எல்லாம் 3 or 4 மணி நேரம் தூங்கியவர்கள் என்று சொல்ல கேட்டு இருக்கிறேன். அதை பற்றி நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள்?-
தாமோதரன்

வணக்கம் நண்பரே தாங்கள் கூறுவது சரி தான் கடுமையான உழைப்பால் கண்டுபிடிப்புகள் வந்துள்ளன என்று சொல்லுகிறீர்கள். நாட்டில் உள்ள மக்கள் தொகையில் விஞ்ஞானிகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். யாராவது ஒன்று இரண்டு படைப்புகள் அப்படி கடவுள் படைத்து இருக்கலாம். இப்பதிவுகளின் நோக்கம் ஒரு சாதாரண மனிதனுக்கு மட்டும் தான். என்னை போல இருப்பனுக்கு தான் எழுதுகிறேன். நான் இதை எழுதும் போது சொல்லியுள்ளேன் கீழ்மட்ட நிலையில் இருப்பன் ஒருவன் இதை படித்து வந்தால் அவனுக்கு இந்த பதிவு அவனின் மனதிற்க்குள் உள்வாங்கி அதைக்கொண்டு நடந்தால் அதுவே வெற்றி. தினமும் வேலை செய்கிறவன் எதை கண்டுபிடிக்க போகிறான். அவனுக்கு இது உகந்ததாக இருக்கும்.வேலையை விட்டு வந்தால் நன்றாக தூங்க வேண்டும் என்று தான் நினைப்பான். அவனுக்கு இது நன்றாக இருக்கும். 

இந்த பூமியில் இருக்கும் உயிர் உள்ளவைகளில் மனிதன் மட்டுமே தன்னுடைய கழிவுகளை விட்டு செல்லுகிறான். அவன் எதையாவது கண்டுபிடித்து விட்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்கிறான் என்று நினைக்கிறேன். வேறு எந்த உயிர் இனமும் தான் இந்த பூமியில் வாழ்ந்தேன் என்ற தடைங்களை வைத்துவிட்டு செல்லுவதில்லை.

தூக்கம் என்பது நாள் முழுவதும் நாம் செலவிட்ட ஆற்றலை மீட்டு எடுக்கும் ஒரு நிலை. தூக்கத்தை எத்தனை மணி நேரம் தூங்கினால் நல்லது என்று சரியான ஆய்வு இல்லை. என்னை பொறுத்தவரை விடிந்து காலையில் எழும் போது நீங்கள் புத்துணர்வோடு இருந்தால் அதுவே போதும்.


வணக்கம், 

வெளியூர் சென்றுவிட்டதால் பதிவுகளை இன்று தான் படித்தேன்...தாங்கள் இப்பதிவில் கூறியபடி நடந்தால் மிகவும் மகிழ்வேன்...ஏனெனில் எனக்கு பாக்கியாதிபதி 7ல் அமர்ந்திருக்கிறார்...

இன்றைய பதிவை படித்தவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்...பொதுவாக ஜோதிடத்தில் நல்ல வாழ்க்கை துணை அமையும் என்பார்கள் நல்ல குருவாகவும் அமைவார்கள் என்பது புது தகவல்...உண்மையில்,இத்தருனத்தை என்னால் நம்பவே முடியவில்லை...மிக்க நன்றி...

R.Srishobana 

வணக்கம் உங்களின் எதிர்பார்ப்புகள் போல் துணைவர் அமைய வாழ்த்துக்கள். அதைபோல் அந்த பாக்கியாதிபதி யார் என்று பார்த்து அதற்கு தகுந்த பரிகாரத்தையும செய்துவிடுங்கள் ஏன் என்றால் பெண்களை பொறுத்தவரை ஏழாவது வீட்டில் எந்த கிரகமும் அமையகூடாது. சுபகிரகமாக இருந்தாலும் அமையக்கூடாது. பாக்கியாதிபதி தானே என்று சும்மாக இருந்துவிடவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: