Followers

Sunday, October 21, 2012

ஆன்மீக அனுபவங்கள் 7




வணக்கம் நண்பர்களே நான் ஒரு சக்தியை எடுக்கும் போது மிக தெளிவாக இருந்ததேன் ஏன் என்றால் ஒரு தெய்வத்தை எடுத்த பிறகு அதற்கு நாம் நாள் தோறும் பூஜை செய்து கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுது மட்டுமே அது நம்மிடம் இருக்கும் இல்லை என்றால் அது போய்விடும் என்று ஒரு சில தெய்வங்கள் இருக்கின்றன.

அப்பொழுது நான் நினைத்தது இப்படி இருந்தால் நமக்கு ஒத்துவராது ஏன் என்றால் நாம் எங்கு எப்படி இருப்போம் என்று நமக்கே தெரியாது. நாம் வாழுவது ஒரு சராசரி வாழ்வு பார்க்கும் வேலையும் சரியில்லை. இதற்கு நாம் எங்கு பூஜை க்கு செலவு செய்வது என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் அதே நேரத்தில் எடுக்கும் சக்தியும் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்றும் பார்த்தேன் அதற்கு தகுந்தார் போல் குரு அமைந்தார்.

அவர் முதலில் என்னிடம் சொன்னாது நீ பூ சாம்பிராணி ஊதுபத்தி எல்லாம் முதலில் ஒரு 21 நாள்கள் மட்டும் செய் அதன் பிறகு அந்த சக்திக்கு உன் மனதில் இருந்து தான் பூ போட வேண்டும். நீ பூ போடு என்று உன் மனது நினைத்தால் அந்த சக்தியின் காலில்  பூ விழவேண்டும் அப்படி பயிற்சி செய்ய வேண்டும் இல்லை என்றால் நீ பயிற்சி செய்யாதே என்று சொல்லிவிட்டார். ஆகா சரியான இடத்திற்க்கு தான் வந்து இருக்கிறோம் என்று மனதில் என் குலதெய்வத்திற்க்கு நன்றி சொன்னேன்.அது போல தான் நடந்தது இன்று வரை அப்படி தான் ஆனால் சில நேரங்களில் வீடுகளில் இருந்தால் சாம்பிராணி ஊதுபத்தி வாங்கி வைப்பேன்.

நான் கூப்பிட்டால் மட்டுமே அது வரும். அதுவரை அது எந்த தொந்தரவும் செய்யாது. ஆனால் அது என்னை காப்பாற்றிக்கொண்டே இருக்கும். ஏன் என்றால் அது என் தாய். ஒரு தாய் மகனிடம் எதிர்பார்க்காது கொடுத்து கொண்டு இருக்கும். இப்படி பட்ட சக்தியை நீங்கள் எடுத்தீர்கள் என்றால் நீங்கள் புத்திசாலி.

ஒரு தெய்வத்தை நீங்கள் எடுக்கும் போது அதற்கு கொடுக்கும் நைவேத்தியம் ரொம்ப முக்கியமாக இருக்கும் அப்பொழுது மட்டுமே அது உங்களை நாடி வரும். ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் ஒரு படையல் இருக்கிறது அது எப்படி என்று உங்கள் குரு தான் சொல்லிக்கொடுப்பார். சில தெய்வங்கள் அசைவம் தான் கேட்கும். சில காளிக்கு அசைவம் தான் படையலாக வைப்பார்கள் ஆனால் நீங்கள் திறமையானவர்களாக இருந்தால் சைவத்தில் திருப்திபடுத்தலாம்.பைரவருக்கு மது கொடுத்தால் நல்ல திருப்திபடுவார். அப்பொழுது எளிதில் உங்களிடம் வருவார். இதில் ஏகாப்பட்ட விசயங்கள் இருக்கின்றன. உங்களின் குருநாதர் சொல்வது போல் நடக்க வேண்டும்.

நீங்கள் எடுப்பது எப்பொழுதுமே சாந்தமாக இருப்பவர்களை பார்த்து எடுத்துக்கொள்ளுங்கள் அது தான் உங்களுக்கு நல்லது இந்த அவசர உலகத்தில் நமக்கு இருக்கும் வேலையில் நமது வேலையை பார்ப்பதற்க்கே கஷ்டமாக இருக்கும். இதில் இவர்களுக்கு பணிவிடை செய்வது என்பது ரொம்ப கஷ்டம அதனால் சாந்தமானவர்களை எடுத்துக்கொள்வது நல்லது.

ஒரு சில தெய்வங்கள் சாதாரணமாக உரு ஏறாது. அதற்கு மையை சில குருநாதர்கள் பயன்படுத்துவார்கள் அப்படியும் ஏறவில்லை என்றால் ரசமணியை பயன்படுத்தி ஏற்றி தருவார்கள் அப்படியும் நீங்கள் செய்துகொள்ளலாம்.

பொதுவாக குருநாதர் உடன் இருப்பது நல்லது அப்பொழுது அவர் மூலம் உங்களுக்கு கிடைக்கும் நீங்கள் குருவிடம் மந்திரம் வாங்கி செய்தாலும் அடிக்கடி அவரை சென்று பாருங்கள். அப்பொழுது மட்டுமே உங்களுக்கு அந்த தெய்வம் வரும் இல்லை என்றால் வருவது கஷ்டம்.

உரு ஏற்றுவதற்க்கு நீங்கள் பயன்படுத்தும் பொருள் முக்கியமான ஒன்று தான் என்னுடைய குரு எனக்கு எந்த வித பொருளும் இல்லாமல் ஏற்றி தந்தார் ஆனால் நான் அவருடன் இருந்தேன்.

உரு ஏற்றுவதற்க்கு மை ரசமணியை பயன்படுத்தும் போது கவனமாக கையாளவேண்டும். மை எடுப்பதில் பல வழிமுறைகள் இருக்கின்றன நீங்கள் புத்தகங்களில் படிததுவிட்டு தனியாக முயற்சி செய்யாதீர்கள். அதைபோல் ரசமணியும் தகுந்த பயிற்சி இல்லாமல் செய்யாதீர்கள்.

மை, ரசமணி எடுப்பதில் தீயசக்திகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். அதை உரு ஏற்றுவதற்க்கு தடைகளை தரும். எந்த பயிற்சியும் இல்லாமல அதை செய்வது தவறு. இதை ஏன் எழுதுகிறேன் என்றால் என்னை சந்திக்கும் நண்பர்கள் நான் காட்டிற்க்கு சென்று மூலிகைகளை எடுத்து வந்திருக்கிறேன் அதனை வைத்து நான் மை எடுக்கலமா என்று கேட்பதால் இதனை சொல்லுகிறேன்.

எதையும் புத்தகங்களில் படித்து செய்வதற்க்கும் அனுபவத்தில் செய்வதற்க்கும் வித்தியாசம் இருக்கிறது. மை, ரசமணி எல்லாம் நீங்கள் ஒரு தெய்வத்தை எடுத்த பிறகு செய்யுங்கள் அப்பொழுது அது நன்மை தரும்.

நண்பர்களே எனது குருவின் புகைப்படத்தை போடலாம என்று என் குருநாதரிடம் கேட்டேன் அதற்கு அவர் எனக்கு விளம்பரம் தேவையில்லை போடாதே என்று சொல்லிவிட்டார்.  ஆன்மீக அனுபவங்கள் 6 பகுதியில் ஒரு சாதுவின் புகைபடத்தை போட்டு இருக்கிறேன் அவர் போல் தான் என் குருநாதர் இருப்பார்.  இந்த படத்தை பார்த்தவுடன் அவர் போல இருந்ததால் அதனை போட்டேன். இரண்டு பேரையும் ஒன்றாக இருக்க வைத்தால் யார் என்று எனக்கு அடையாளம் கண்டுபிடுப்பது கடினம் அதனால் இந்த படத்தை போட்டேன்.  நன்றி



அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: