Followers

Tuesday, March 19, 2013

ஸ்ரீ ராகவேந்திரர்



வணக்கம் நண்பர்களே!
                     நேற்று தென்காசியில் இருந்து ஒரு நண்பர் என்னை தொடர்புக்கொண்டு பேசினார் அவர் முதல் முறையான என்னிடம் நேற்று தான் பேசினார். அவரைப்பற்றி தென்காசியில் இருக்கும் எனது நண்பர் நேற்று சொல்லியிருந்தார் எனது நண்பர் ஒருவர் உங்களிடம் பேசுவார். நான் உடனே பேச சொல்லுங்கள் என்று சொன்னேன். 

அந்த நண்பர் பேசும் போது அவர் விவசாயத்தில் இயற்கை உரங்களை உற்பத்தி செய்து அதன் மூலம் விவசாயத்தில் நல்ல முறையில் உற்பத்தி செய்வதற்க்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி செய்து வருகிறேன் என்று சொன்னார். நான் அவரிடம் நீங்கள் நல்ல ஆன்மீகவாதியாமே என்று கேட்டேன். அதற்கு அவர் அப்படி எல்லாம் கிடையாது நான் இந்த அமைப்பை மட்டும் ஏற்படுத்தி செய்துக்கொண்டு வருகிறேன் என்றார். நான் மக்களுக்கு செய்யும் சேவை தான் ஆன்மீகம் என்று அவரிடம் சொல்லிருந்தேன். ஒரு சில மணித்துளிகளில் இந்த உரையாடலை முடித்துக்கொண்டுவிட்டோம். 

எந்த ஒரு நிகழ்வும் எந்த ஒரு காரணமும் இல்லாமல் நடைபெறாது என்பதில் எனக்கு எப்பொழுதுமே ஒரு நம்பிக்கை உண்டு. அந்த நிகழ்வாக இன்று பார்த்தால் ஸ்ரீ ராகவேந்திரர் அவதரித்த தினம். நான் இன்று கொட்டிவாக்கம் அலுவலகத்திற்க்கு செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்து அடையாரில் பஸ் பிடித்து வரும் போது ஸ்ரீ ராகவேந்திரர் அவதார தினமான இன்று பல போஸ்டர்களை பார்க்க நேரிட்டது. அந்த போஸ்டர்களில் பார்த்தவுடன் எனக்கு முதலில் ஞாபகம் வந்தது. நேற்று தென்காசி நண்பரிடம் பேசிய வார்த்தை தான். 

ஸ்ரீ ராகவேந்திரர் சொல்லிய உபதேசங்களில் முக்கியமான ஒன்று மக்கள் சேவையே மகேசன் சேவை. நான் தென்காசி நண்பரிடம் சொன்ன அந்த வரிகள் எனக்கு இவரை பார்த்தவுடன் ஞாபகம் வந்தது. மக்களுக்கு செய்கின்ற சேவை தான் ஆன்மீகத்தில் மிக உயர்ந்த சேவை என்று ஸ்ரீ ராகவேந்திரர் சொல்லியுள்ளார். அவர் பல உபதேசங்களை சொன்னாலும் இந்த வரிகள் என்னை கவர்ந்தன. 

அவரின் உபதேசங்கள் புத்தகங்களாக கிடைக்கின்றன விருப்பம் இருந்தால் வாங்கி படித்துக்கொள்ளுங்கள். 

ஸ்ரீ ராகவேந்தரர் பற்றி உங்களுக்கு பயன்படும் விதத்தில் ஒரு நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது அதற்கு இன்று தான் சரியான நாளாக தெரிகிறது. நீங்கள் வியாபாரம் செய்து வந்தால் நீங்கள் ஒரு முறை மந்திராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்தரை தரிசித்துவிட்டு வாருங்கள் உங்களின் வியாபாரம் நன்றாக இருக்கும். 

ஜீவசமாதி என்று சொல்லிக்கொண்டு திரிந்துக்கொண்டு இருக்கின்றோம் அல்லவா. ஒரு நல்ல ஜீவசமாதியை தரிசித்துவிட்டு எப்படிபட்ட அற்புதத்தை நீங்கள் அடைந்தீர்கள் என்பதை தெரிந்துக்கொள்ள பிருந்தாவனம் சென்று வந்து என்னிடம் சொல்லுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: