Followers

Thursday, March 21, 2013

கருப்பண்ண சாமி



வணக்கம் நண்பர்களே !
                      கடந்த வாரம் தமிழ்நாட்டின் தென்பகுதிக்கு சென்று வந்தேன். அங்கு இருக்கும் தெய்வ வழிபாடு அனைத்தும் உக்கிரவழிபாடாகவே இருக்கிறது. மக்களும் அப்படி தான் இருப்பார்கள் போல.

நான் பல தெய்வங்களை பார்த்தாலும் கருப்பண்ண சாமியை பல இடங்களில் பார்க்கமுடிந்தது. நமக்கும் கருப்பண்ண சாமியைப்பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. இன்று தான் அந்த எண்ணத்தை கருப்பண்ண சாமி நிவர்த்தி செய்து வைத்திருக்கிறார். 

கருப்பண்ண சாமியைப்பற்றி நான் புத்தகங்களில் படித்தது கிடையாது. இது ஒரு எல்லையை காக்கும் தெய்வம் என்பது மட்டும் தெரியும். ஐயப்ப வழிபாட்டிலும் பிரச்சித்தப்பெற்றது என்பதை அறிவேன். இது அதிகமான சக்தி உடையது என்பது எனது அனுபவத்தி்ல் பார்த்திருக்கிறேன். அப்படிபட்ட கருப்பண்ண சாமியின் அருளாசியும் எனக்கு கிடைத்தது. நான் கொடுத்த வைத்தவன் என்று சந்தோஷப்பட்டு இருக்கிறேன். 

கருப்பண்ண சாமியிடம் நீங்கள் நியாமான கோரிக்கையை வைத்தால் கண்டிப்பாக அந்த கோரிக்கையை நிவர்த்தி செய்துக்கொடுப்பார். உங்களின் கோரிக்கை நியாயமாக இருந்தால் அது எப்பேர்பட்ட பிரச்சினை என்றாலும் அதனை நிவர்த்தி செய்துக்கொடுப்பார்.

கருப்பண்ண சாமி இருக்கும் கோவிலுக்கு சென்று அவருக்கு நைவேத்தியமாக பொங்கல் படைக்கவேண்டும். மாம்பழம் பலாபழம் இளநீர் வைக்கலாம். மிகச்சிறந்த நைவேத்தியமாக பாதம் பருப்பை வறுத்து படைப்பது நல்லது. பாயசம் வைத்தும் படைக்கலாம்

நீங்கள் நினைத்ததை கருப்பண்ண சாமி நடத்திக்கொடுத்தவுடன்   அவருக்கு  காணிக்கையாக குதிரை, ஈட்டி, அரிவாள் செய்துகொடுக்கலாம்.

கருப்பண்ண சாமிக்கு உகந்த நாள் அமாவாசை.

ஒரு அமாவாசைக்கு நீங்கள் சென்று காவல் தெய்வமான கருப்பண்ணசாமியை வணங்கிவாருங்கள் அனைத்து பிரச்சினையும் உங்களுக்கு தீரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

KJ said...

Nice info sir. Thanks

rajeshsubbu said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி