Followers

Tuesday, July 15, 2014

கற்பனை என்பது உண்மையே


வணக்கம் நண்பர்களே!
                    இன்று காலை சென்னை திரும்பிவிட்டேன். தொடர்ந்து வேலை இருந்ததால் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை. இனி தொடர்ந்து பார்க்கலாம்.

நமது ஜாதகத்தில் உள்ள தோஷத்தை தவிர நாம் வாழ்ந்துக்கொண்டிருக்க இந்த வாழ்க்கையில் நாம் செய்யும் அதிகப்பட்ச குற்றங்கள் நம்மை வாழவிடாமல் தடுக்கிறது. அது எப்படி என்பதை பார்க்கலாம்.

கற்பனை என்பது உண்மை என்பது யாருக்கும் தெரியவில்லை. நீங்கள் தனியாக அமர்ந்து ஒரு சின்ன கற்பனை செய்து பாருங்கள். நான் கோபமாக இருக்கிறேன் என்று சின்ன கற்பனை செய்தால் உங்களின் நாடிதுடிப்பு அதிகரிக்கும். சும்மா உட்கார்ந்துக்கொண்டு ஒரு பெண்ணோடு உடல் உறவு வைத்துக்கொள்வது போல் கற்பனை செய்து பாருங்கள் உங்களின் உடல் உடலறவு கொள்ளும் நிலையில் இருக்கும்.

உங்களின் உடலில் கற்பனை மட்டும் தான் செய்கிறீர்கள் ஆனால் உங்களின் உடல் அதற்கு தயாராகிவிடுகிறது. அதுபோல் மனதளவில் பல கற்பனைகள் செய்யும்பொழுது உங்களுக்கு வரும் தோஷமும் அதிகரித்து உங்களின் வாழ்க்கையை பிரச்சினையாக்கிவிடுகிறது.

ஒருத்தர் பல கொலைகள் பல கற்பழிப்புகளை தன் மனதில் செய்கிறார். அது மிகப்பெரிய தோஷமாக இந்த வாழ்க்கையிலேயே ஏற்பட்டுவிடுகிறது. கற்பனை என்பது ஒரு உண்மை. அதனால் மனதளவில் நீங்கள் பக்குப்பட்டுவிட வேண்டும்.

மனதில் கற்பனை செய்யகூடாது. என்னுடைய குரு என்னிடம் சொல்லுவார். மனதில் நீ அம்மனுக்கு பூ போடு ஊதுவத்தி ஏற்று தீபம் காண்பி என்பார். அப்படி என்றால் உண்மையாகவே ஏற்றுவது போல் தான் அது. கற்பனை என்பது உண்மை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

Unknown said...

yes,hundred percent correct.Thought are the one of the important things to change the man character etc . Often management experts , what they are telling , already told by our fore fathers ,saints etc , in the AC class room with huge fees ,as "positive thinking".Thanks for this article

பிரசன்ன குமார். மு said...

வணக்கம் அண்ணா

கற்பனை செய்யாமல் இருக்க முடியுமா. அவ்வாறு முடியவில்லையெனில் நல்லவிதமான கற்பனைகளை எவ்வாறு வளா்த்து கொள்வது. தீய கற்பனைகளை எவ்வாறு நீக்குவது என்பதை தயவு செய்து பதில் அளியுங்கள் அண்ணா