Followers

Monday, July 28, 2014

செல்வவளம் உயருவதற்க்கு வழி


வணக்கம் நண்பர்களே!
                    செல்வவளம் உங்களுக்கு சேருவதற்க்கு பல வழிகளை சொல்லிக்கொண்டு வருகிறேன். அதனை எல்லாம் நீங்கள் கடைபிடித்துவருவீர்கள் என்று நம்புகிறேன். பொதுவாக மக்கள் பணத்தை தேடி தானே ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் செய்வீர்கள் என்று நம்புகிறேன். அதில் புதிய தகவல்களை இன்று பார்க்கலாம்.

மற்ற மிருகங்களில் இருந்து மனிதனை தனியாக பிரித்து காட்டுவது அவன் அணியும் ஆடைகள் மட்டுமே முதல் இடத்தில் இருக்கும். உலகத்தில் வசிக்கும் மிருகங்களில் மனிதன் மட்டும் நாகரீகம் அடைந்துவிட்டான் என்று காட்டுவது அவன் அணியும் ஆடைகளே.

ஒவ்வொரு மனிதர்களும் ஆடைகளை அணிந்தாலும் ஒரு பணக்காரர் அணியும் ஆடை என்பது கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். கொஞ்சம் விலையுர்ந்த ஆடைகளை அணிவார்கள் அப்படி நீங்களும் மற்றவர்களிடம் இருந்து உங்களை தனித்து காட்ட வேண்டும் என்றால் நீங்கள் அணியும் ஆடை வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதை விட விலை கூடுதலாக இருக்க வேண்டும்.

விலையுர்ந்த ஆடைகளை நீங்கள் அணியவேண்டும் அல்லது விலை குறைந்தாலும் அந்த ஆடைகள் மிகவும் சுத்தமாக உங்களுக்கு இருக்கவேண்டும். உங்களிடம் கோடிக்கணக்கான பணம் இருந்தாலும் உங்களை காட்டுவது முதலில் நீங்கள் அணியும் ஆடைகள். 

ஏன் இப்படி உங்களை ஆடைகளை அணிய சொல்லுகிறேன் என்றால் உங்களின் மனதிலேயே உங்களின் ஆடைகள் உங்களை உயர்த்திக்கொண்டே இருக்கும். நாம் இந்த விலையுர்ந்த ஆடையை அணியகிறோம் இதற்க்காகவே நாம் நன்றாக சம்பாதிக்கவேண்டும் என்று உங்களின் மனது நினைக்கும். நீங்கள் செயலில் இறங்குவீர்கள்.

உங்களிடம் இருக்கும் பணத்திற்க்கு தகுந்தாறு ஆடைகளை தேர்வு செய்துக்கொள்ளுங்கள். அடுத்த முறை ஆடைகளை தேர்வு செய்யும்பொழுது இதனை விட கூடுதலான விலையில் எடுத்து அணியவேண்டும் என்று நினையுங்கள். அப்பொழுது உங்களின் வருமானத்தை உயர்த்த உங்களின் மனது நினைக்கும். மனது நினைத்துவிட்டால் உங்களின் செல்வம் கண்டிப்பாக உயரும்.

இது எல்லாம் ஒரு வழியா என்று மட்டும் நீங்கள் நினைக்கவேண்டாம். கண்டிப்பாக உங்களை இந்த வழிமுறை உயர்த்தும். வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை ஆடையை மறந்திடவேண்டாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

ATOMYOGI said...

வணக்கம் நண்பரே!
வெள்ளிக்கிழமைக்கு வெள்ளை ஆடை என்பது போல் மற்ற நாட்களுக்கும் உண்டா? உண்டெனில் அனைவருக்கும் தெரிவித்திட வேன்டுகிறேன்.
நன்றி.

KJ said...

Sir,

Guru is authority for Money. Sukran is authority for luxurious. Who is important here for earning money. what is the difference. Also Sukran vargothamam in 12th house is benefitable for magara lagna?

Thanks,
Sathishkumar GS