வணக்கம்!
ஒரு கிரகத்தின் பார்வை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு கிரகத்திற்க்கும் ஒவ்வொரு விதமான பார்வை இருக்கின்றது. சனி என்றால் மூன்று ஏழாம் மற்றும் பத்தாவது பார்வை என்பார்கள். குரு கிரகம் என்றால் ஐந்து ஏழு மற்றும் ஒன்பது பார்வையை செலுத்தும் என்பார்கள். பார்வை படும் இடத்திலும் இந்த கிரகத்தின் ஆதிக்கம் இருக்கும்.
கிரக பார்வையில் ஒவ்வொரு விதமான பார்வைக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்றாலும் ஏழாவது பார்வை பார்க்கும் அனைத்து கிரகங்களும் ஒரு விதத்தில் அந்த இடத்தை நன்றாகவே வேலை செய்துவிடும் என்பது அனுபவத்தில் பார்த்த ஜாதகத்தில் தெரிகின்றது. ஏழாவது பார்வையில் அந்த இடம் தான் அமர்ந்த வீட்டை விட அதிகமாவே பலனை கொடுத்துவிடுகின்றது.
லக்கனத்தில் சனி இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் இது ஏழாவது பார்வையாக பார்க்கும் களத்திர இடத்தை அதிகமான பாதிப்பை கொடுத்துவிடும். லக்கனத்தில் அமர்ந்த சனி ஏழாவது பார்வையாக நேராக பார்க்கும் இடம் பாழாகிவிடுகின்றது என்று பலனை சொல்லலாம். சனிக்கு மூன்றாவது இருந்தாலும் ஏழாவது பார்வையாக பார்க்கும் இடம் அதிக பாதிப்பை பெறும்.
ஏழில் செவ்வாய் அமர்கின்றது என்று வைத்துக்கொள்வோம். ஏழில் இருந்து லக்கனத்தை பார்ப்பதால் இவரின் உடல் நிலையில் அதிக பாதிப்பை கொடுக்கும். இவர்க்கு இரத்த சம்பந்தப்பட்ட பிரச்சினையை கொடுக்கும். முக்கியமாக லக்கனம் பாழ் என்று எடுத்துக்கொள்ளலாம்.
நேராக ஒரு கிரகம் அதுவும் தீயகிரகம் பார்க்கும் பொழுது மிகப்பெரிய பாதிப்பை கொடுக்கின்றது. அதே நேரத்தில் சுபகிரகம் பார்க்கும்பொழுது நல்ல பலனை எதிர்பார்க்கலாம். மற்ற பார்வையை விட ஏழாம் பார்வைக்கு அதிக பலனை நாம் எடுத்துக்கொள்ளலாம்.
கட்டண பதிவு வரும் அமாவாசையில் இருந்து வேலை செய்ய ஆரம்பிக்கும். புதிய நபர்கள் சேருவதாக இருந்தாலும் அதுவரை பத்தாயிரம் பணம் கட்டி தங்களை இணைத்துக்கொள்ளலாம்.
நேற்று முதல் நவ அம்மன் (சண்டி) யாகம் சென்னையை சேர்ந்த திரு சதீஸ் ஆடிட்டர் அவர்களுக்காக நடைபெற்று வருகின்றது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment