Followers

Tuesday, January 21, 2020

அன்னதானம்


வணக்கம்!
          ஒரு மனிதனுக்கு செய்யும் நேரிடையான உதவி வேலை செய்கின்றதோ இல்லையோ அவனுக்கு செய்யும் மறைமுக உதவி நன்றாகவே வேலை செய்துவிடும். எப்பேர்பட்ட தீங்கானவனாக இருந்தாலும் அவனின் உடல் உங்களை ஆசீர்வதிக்கும். இதனை நன்கு அறிந்து நமது முன்னோர்கள் அன்னதானம் என்ற ஒன்றை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

நீங்கள் அன்னதானம் செய்தால் உங்களுக்கு எதிரியாக இருந்தாலும் அவனின் உடல் சந்தோஷப்பட்டு அவனை அறியாமலேயே உங்களை வாழ்த்திவிடுகின்றது. உலகத்தில் இருக்கின்ற தானத்தை விட அன்னதானம் சிறந்த ஒன்று என்று சொல்லிருக்கின்றனர். அன்னதானம் அடிக்கடி செய்வது உங்களுக்கு ஏற்படும் எப்பேர்பட்ட தோஷமும் உங்களுக்கு ஏற்படும் தடைகளை உடைத்து உங்களை வாழவைக்கின்றது.

நான் பெரும்பாலும் அன்னதானம் சாப்பிடுவதில்லை நமது வாடிக்கையாளர்கள் உணவங்களில் வாங்கிகொடுக்கும் சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன் மற்றபடி எந்த வித அன்னதானத்திலும் அவ்வளவு எளிதில் சாப்பிடுவது கிடையாது. தவிர்க்கமுடியாத பட்சத்தில் அன்னதானம் சாப்பிடுவது உண்டு. நீங்களும் முடிந்தால் இதனை கடைபிடித்து வரலாம்.

நீங்கள் அவ்வப்பொழுது பிறர்க்கு அன்னதானம் செய்துக்கொண்டே வாருங்கள். இது உங்களை உயர்த்தும். நீங்கள் கஷ்டபட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள் என்னால் அன்னதானம் எல்லாம் செய்யமுடியாது என்று நீங்கள் நினைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்து கோவிலில் நடக்கும் அன்னதானத்திற்க்கு பணத்தை கட்டிவிடுங்கள் குறைந்தது ஆறு மாதத்திற்க்கு ஒரு முறையாவது இதனை செய்யவேண்டும். 

வருகின்ற தை பூசத்திற்க்கு உங்களுக்கு அருகாமையில் உள்ள கோவில்களில் நீங்கள் ஒரு அன்னதானம் நடப்பதற்க்கு ஏற்பாடு செய்துக்கொள்ளுங்கள். குறைந்தளவு எண்ணிக்கையில் இருந்தாலும் பரவாயில்லை உங்களால் முடிந்ததை அன்னதானத்திற்க்கு என்று கொடுத்து உதவி செய்யுங்கள். அன்னதானத்திற்க்கு பெயர் பெற்றது தை பூச அன்னதானம் என்பதால் இதனை அனைவரும் செய்யுங்கள்.

நான் அவ்வப்பொழுது பல முருகனின் கோவில் மற்றும் என்னால் முடிந்தவர்களுக்கு அன்னதானத்தை செய்துக்கொண்டு இருக்கிறேன். என்னுடையது என்பதற்க்காக அதனை வெளியில் அந்த நேரத்தில் சொல்லுவதில்லை. நீங்களும் இதனை செய்யவேண்டும் என்பதற்க்காக இந்த நேரத்தில் இதனை சொல்லிருக்கிறேன். அனைவரும் தைபூசம் அன்னதானம் செய்யவேண்டும் என்பதை கண்டிப்பாக சொல்லிவிடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: