Followers

Tuesday, January 28, 2020

முன்கூட்டியே அறிவது எப்படி?


வணக்கம்!
          நமக்கு வரக்கூடிய நல்லது கெட்டதை முன்கூட்டியே அறிவதற்க்கு சோதிடம் பயன்பட்டாலும் அதனை விட ஆன்மீகத்தின் வழியாக நமக்கு தெரிவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றதா என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டு அனுப்பிருந்தார். கண்டிப்பாக ஆன்மீகத்தின் வழியாக இதற்கு வழி இருக்கின்றது.

ஒரு நபர் தினமும் குறைந்தது ஐந்து நிமிடம் ஒதுக்கி பூஜையறையில் சாமி கும்பிட்டாலே போதும் அவர்களுக்கு நடைபெறும் அனைத்து நல்லது மற்றும் கெட்டதை தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கின்றது. இதன் கூட கொஞ்சம் அமைதியான குணம் தேவை. இயற்கையாகவே அனைத்தும் நமக்கு சொல்லிக்கொண்டு தான் இருக்கும்.

ஒரு காரியத்திற்க்கு நீங்கள் செல்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம் நீங்கள் கிளம்பும்பொழுது உங்களின் வீட்டில்  ஏதோ ஒன்று உங்களிடம் காட்டும். பல்லி இருந்தால் அதன் நிமித்தம் அடிக்கும். தினமும் அதனை கவனிக்கும்பொழுது எது நல்ல நிமித்தம் எது கெட்ட நிமித்தம் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். நீங்கள் செல்லும்பொழுது எதிரே வரும் நபரை வைத்தும் நீங்கள் கண்டுக்கொள்ளலாம்.

பரப்பரப்பான வாழ்க்கையில் இது எல்லாம் சாத்தியமா என்று கேட்டால் கண்டிப்பாக இது எல்லாம் சாத்தியமே. அதனை விட உங்களின் மனது அதற்கு சரியாக ஒத்துழைக்கின்றதா என்பதை வைத்தும் நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். நன்றாக நீங்கள் பிரபஞ்சத்தோடு ஒன்றிணையும்பொழுது உங்களுக்குள் அனைத்தையும் முன்கூட்டியே சொல்லிவிடும்.

நம்முடைய மனம் பெரிய அளவில் சஞ்சலத்திலேயே இருப்பதால் எதனையும் நமக்கு தெரியாமல் போய்விடுகின்றது. மிக கடுமையான பிரச்சினை வரும்பொழுது கூட நமக்கு தெரிகின்றது அதனை விட மரண வருவதையும் ஒரு சில நிகழ்வுகளை வைத்தே நாம் தெரிந்துக்கொள்ளமுடியும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: