வணக்கம் நண்பர்களே!
மறுபிறவியைப்பற்றி பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. இன்று பார்த்துவிடலாம். சிம்ம ராசிக்கு எப்படி அடுத்த பிறவி அமையும் என்பதை பார்க்கலாம்.
சிம்ம லக்கினம்
சிம்ம லக்கினத்தில் ஒருவர் பிறந்தால் அவருக்கு எப்படி மரணம் ஏற்படும் என்பதை பார்க்கலாம். மரணம் இயற்கையாகவே நடைபெறும். மரணத்திற்க்கு என்று அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளமாட்டார்கள் அதாவது படுத்த படுக்கையாக நீண்ட நாட்கள் இருந்து இறக்கமாட்டார்கள்.
இவரின் மரணம் இதயநோய் வந்து இறக்கநேரிடும். மரணம் பெரும்பாலும் அடுத்த இடத்தில் நடைபெறும். வீட்டில் மரணம் இல்லாமல் மருத்துவமனை அல்லது வெளியில் செல்லும்பொழுது இவர்களுக்கு மரணம் ஏற்படும்.
மறுபிறவி
உங்களின் வீட்டில் இருந்து வடமேற்கு திசையில் பிறக்ககூடும். உங்களின் வீடு கடல் அல்லது ஆறு பகுதியில் அமையும். குளத்தின் கரையில் கூட அமைந்திருக்கும். உங்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் தண்ணீர் சம்பந்த துறையில் வேலை செய்வார்கள். கடல் சார்ந்த தொழில்களில் கூட வேலையில் இருப்பார்கள்.
உங்களின் குடும்பத்தில் அதிகபேர் இருப்பார்கள். ஒரு இடத்தில் வேலை செய்யமாட்டார்கள். வேலையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். அடுத்த ஜென்மத்தில் பெண்ணாக பிறப்பதற்க்கும் வாய்ப்பு இருக்கிறது
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
3 comments:
வணக்கம் அய்யா
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. எனக்கு சில சந்தேகம் 12ம் அதிபதியை மட்டும் வைத்து மறுபிறவியை கூறியுள்ளீர்கள். 12இல் ஏதாவது கிரகம் இருப்பின் மாறாதா.
நன்றி
செல்வம்
வணக்கம் அமரும் கிரகம் மற்றும் பார்க்கும் கிரகத்தின் தன்மையை பொறுத்து மாறும். அதனை எல்லாம் வரும் பதிவில் பார்க்கலாம். நன்றி நண்பரே
Dear sir
I believe rebirth
I have one doubt about this
WHY WORLD POPULATION is increasing every day. What is the meaning of this new birth
thanks
Antony
Post a Comment