வணக்கம் நண்பர்களே!
சக்தி என்றால் என்ன என்று கேட்டேன். பல்வேறு நபர்கள் அதனைப்பற்றி சொல்லிருந்தனர். உடலுக்கு தேவையான சக்தியைப்பற்றி சொல்லிருந்தனர்.
சக்தி என்றால் என்ன என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் அது எப்படி வேலை செய்கிறது. எத்தனை வகையான சக்தியை நாம் உணர்ந்திருக்கிறோம் என்று மட்டும் பிரித்து நாம் பார்க்க தெரியவில்லை.
நான் உங்களுக்காக டைப் செய்துக்கொண்டிருக்கிறேன். இதனை நான் டைப் செய்வதற்க்கு எனக்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தியை நான் பெறுவதற்க்கு தினமும் நான் உணவுகளை சாப்பிட்டு பெற்றுக்கொண்டிருக்கிறேன். தொடர்ச்சியாக நான் டைப் செய்யும்பொழுது எனக்கு ஒரு சோர்வு ஏற்படுகிறது. அப்படி சோர்வு ஏற்படும்பொழுது சிறிது நேரம் ஒய்வு எடுத்துக்கொண்டு மறுபடியும் நான் டைப் செய்ய ஆரம்பிக்கிறேன். அதாவது நான் ஒய்வு எடுக்கிறேன் அல்லது தூங்குகிறேன். மறுபடியும் எனது உடல் தயாராகிவிடுகிறது. இந்த சக்தியை நாம் உணவு வழியாக பெறுகிறோம். இது முதல் வகையான சக்தி. உலகத்தில் உள்ள அனைவரும் உணர்ந்த விசயம் இது.
உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் உணர்ந்த சக்தி இது. அனைவரும் அதிகப்படுத்தும் சக்தியும் இந்த சக்தி மட்டுமே. முதல் நிலையிலேயே முக்கால்வாசி மனிதர்கள் வாழ்ந்து மறைந்துவிடுகின்றனர்.
இரண்டாவது சக்தி
நான் டைப் செய்துக்கொண்டிருக்கிறேன். தொடர்ச்சியாக டைப் செய்துக்கொண்டிருக்கும்பொழுது எனது முழுசக்தியும் இழந்துவிடுகிறேன் என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் நான் சாப்பிட்டால் மட்டுமே சக்தியை பெறமுடியும் என்ற நிலையில் இருக்கிறேன். முழு சக்தியும் இழந்து கண் சோர்வு அடைவதுபோல் இருக்கும் நிலையில் எனது அறை தீ பிடித்து எரிகிறது என்று வைத்துக்கொள்வோம் அந்த நேரத்தில் எனது உயிரை காப்பாற்றிக்கொள்ள உடனே ஒடுகிறேன் என்று வையுங்கள். அது இரண்டாவது வகை சக்தி.
முழு சக்தியையும் இழந்து இருக்கும்பொழுது அவசரம் என்று வரும்பொழுது உடனே ஒடுவதற்க்கு எங்கு இருந்து எனக்கு சக்தி கிடைத்தது. அது தான் அவசரகால சக்தி என்கிறோம். இது அவசரகாலத்தில் மட்டும் வெளிப்படுத்தும். இதனையும் மனிதர்கள் உணர்ந்திருப்பார்கள். அவசரகாலத்தில் மட்டுமே இது வெளிப்படுகிறது.
மூன்றாவது சக்தி
ஏதாவது ஒரு இடத்தில் நீங்கள் மயக்கப்பட்டு விழுந்துவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மறுபடியும் நீங்கள் எழும்பொழுது எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று சொல்லுகிறார்கள் அல்லவா. இது தான் பிரபஞ்சசக்தி என்கிறோம். மயக்க நிலையில் நீங்கள் உயிரோடு இருக்கின்றீர்கள் இறக்கவில்லை அந்த நேரத்தில் உங்களுக்கு பிரபஞ்ச சக்தியோடு தொடர்பு ஏற்படுகிறது. புரியவில்லை என்று நினைக்கிறீகளா கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்.
நீங்கள் எதாவது ஒரு வண்டியில் செல்லுகின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அந்த நேரத்தில் எதாவது ஒரு விபத்து வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த நொடி பொழுதில் நீங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் செய்வீர்கள் அதாவது உயிர் போய் வருவது போல் இருக்கும் அல்லவா. அந்த நேரத்தில் உலகமே நின்றுவிடுவது போல் இருக்கும் அல்லவா. அப்பொழுது தான் கடவுளின் சக்தியை நீங்கள் உணர்கிறீர்கள். பிரபஞ்ச சக்தியோடு தொடர்புக்கொள்கிறீர்கள். கடவுளை நீங்கள் பார்கிறீர்கள் என்று அர்த்தம்.
மயக்க நிலையில் கூட நீங்கள் இருப்பது பிரபஞ்சசக்தியோடு தொடர்புக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். மறுபடியும் உங்களிடம் பிறர் வந்து கேட்டால் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று சொல்லுவீர்கள். நீங்களே மறைந்து போய்விடுகிறீர்கள். இது தான் மரணத்தில் நடைபெறும் நிகழ்வு கூட. இதனை நாம் தியானத்தில் உணரலாம்.
ஒரு வண்டி எடுத்துக்கொண்டு நான் கடவுளை பார்க்க போகிறேன் என்று சென்று தவறாக சென்றுவிடாதீர்கள். எதுவும் திட்டம் போட்டு நடக்ககூடாது அதுவாகவே நடக்கும்பொழுது மட்டுமே இது நடைபெறும்.
எப்படி எல்லாம் அடையலாம் என்பதை வரும் பதிவில் பார்க்கலாம்.
கடவுளை காண தயாரா?
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment