Followers

Wednesday, May 28, 2014

நவாம்சம்


வணக்கம் நண்பர்களே!
                    ராசியை வைத்தே பல ஆண்டுகள் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறோம். இன்னும் பல வருடங்கள் இதனைப்பற்றியே சொல்லலாம். ஒரு  மாறுதலுக்காக நவாம்சத்தைப்பற்றி பார்க்கலாம். பொதுவாக அந்த காலத்தில் ராசி கட்டம் மற்றும் நவாம்சம் கட்டம் இந்த இரண்டும் தா்ன் இருக்கும் இப்பொழுது உள்ளதுபோல் இருபது கட்டங்களுக்கு மேல் இருக்காது. இரண்டு கட்டங்கள் இருக்கும்பொழுது சொன்ன பலன்கள் எல்லாம் உடனே பலித்தது. இருபது கட்டங்களை வைத்துக்கொண்டு தவறாக பலனை சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

நவாம்சத்தைப்பொறுத்தவரை அதில் என்ன இருக்கின்றது என்பதை விட அனுபவத்தில் நடந்த விசயத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

ஒரு நபர் ஒரு தொழில் செய்துவந்தார். அவர் என்னிடம் வந்து தொழில் நன்றாக இல்லை என்று சொன்னார். அவரின் ஜாதகத்தில் அவர் செய்து வந்த தொழிலுக்கும் அவரின் ஜாதகத்தின் கிரகநிலைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது. அவரின் தொழிலை நிர்ணிக்கும் கிரகநிலைகளை முதலில் கணக்கில் எடுத்துக்கொண்டு பலனை சொன்னேன்.

ராசி கட்டத்தில் பத்தாவது வீட்டின் கிரகத்தை வைத்து நாம் தொழிலை சொன்னாலும்  இராசிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அவரிடம் சொன்னால் அது தவறாக போய்விடும். ராசியில் பத்தாவது வீட்டு அதிபதியான புதன். நவாம்சத்தில் சுக்கிரனோடு சேர்ந்து இருந்தது. அது எங்கு இருக்கின்றது என்பதைப்பற்றி நாம் கவலைப்படதேவையில்லை. புதன்கிரகம் நவாம்சத்தில் சுக்கிரனோடு சேர்ந்து இருந்தது.

அவரிடம் துணிசம்பந்தப்பட்ட தொழிலில் மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். துணியிலும் கடைபோல் இல்லாமல் ஏஜென்சி தொழில் போல் செய்து வாருங்கள் என்று சொன்னேன்.இராசியின் பத்தாவது வீட்டு அதிபதி நவாம்சத்தில் எந்த கிரகங்களோடு சேர்ந்து இருக்கின்றது என்பதை பார்த்து நாம் தொழிலை முடிவு செய்யவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

venkatesh said...

மீன லக்னம் தனுசு பத்தாம் இடம் வருகிறது,அதில் ராகு பகவான் உள்ளார்.பொதுவாக ராகு-கேது அவர்கள் தாங்கள் இருக்கும் பாவத்தின் பலனை தாங்களே கொடுப்பார்கள் என்று படித்திருக்கிறேன்.
அப்படியானால் பத்தாம் இட அதிபதி ராகு பகவானா? குரு பகவனா?