Followers

Friday, May 9, 2014

விரைய தசா பகுதி 9


வணக்கம் நண்பர்களே!
                    விரைய தசா பகுதியைப்பற்றி பார்த்துவந்தோம். விரையதசாவை எழுத ஆரம்பித்த நோக்கம் ஒரு தொழில் செய்யும்பொழுது என்ன மாதிரி விரையம் ஏற்படும் என்பதை பார்ப்பதற்க்கு எழுத ஆரம்பித்தேன். அதில் சில தகவல்களை பார்த்தோம். தொடர்ந்து பார்ப்போம். 

இன்றைய காலத்தில் ஒரு தொழில் செய்ய ஆரம்பித்து அது வெற்றி அடைய வைப்பது மிகப்பெரிய கஷ்டம். தொழில் செய்கிறேன் என்று போய் பணத்தை விரையம் செய்தவர்கள் அதிக பேர் இருப்பார்கள். பத்தாவது வீட்டு அதிபதி பனிரெண்டில் போய் அமர்ந்தால் உங்களின் தொழில் நஷ்டம் அடையும் அதில் ஒரு முக்கியமான ஒரு தகவலை பார்க்கலாம்.

முதலில் ஒரு தொழிலை நம்ம ஆட்கள் தொடங்கினாலும் அதற்கு தேவையான முதலீட்டை போடுவதில் அதிக தவறு செய்கின்றனர் என்பது தெரிகிறது. ஒரு தொழிலுக்கு தேவையான முதலீடு என்று பார்த்தால் குறைந்த பட்சம் இருபத்தி ஐந்து லட்சமாவது போடவேண்டும் அப்படி போட்டால் தான் அது முதலீடாக இருக்கும்.

பெரும்பாலும் பிழைப்பிற்க்காக கையில் இருக்கும் பணத்தை தொழில் செய்கிறேன் என்று கொண்டு போய் போட்டுவிடுகிறார்கள். அது கொஞ்ச நாளில் போய்விடுகிறது. ஒரு தொழிலுக்கு நான் சொன்ன பணத்தை போடும்பொழுது மட்டுமே அதற்க்கு அழகு. பிழைப்பிற்க்கு என்று கையில் உள்ள பணத்தை போட்டால் அது உங்களை விரையமாக்கிவிடும்.

நான் சொன்ன பணம் இல்லை என்றால் நீங்கள் ஏதாவது ஒரு வேலைக்கு சென்றுவிடுவது நல்லது, இதற்கு குறைந்தளவில் பணத்தை வைத்துக்கொண்டு நீங்கள் செய்யும் வியாபாரம் உங்களை எந்த நேரத்திலும் கவிழ்த்துவிடும். குறைந்தளவு பணத்தை வைத்துக்கொண்டு செய்யும் வியாபாரம் ஒவ்வொரு நாளும் பிரச்சினை மட்டுமே. உங்களின் தொழில் விரையத்திற்க்கு முதல் காரணமாக இது அமையும்.

குறைந்தளவு பணம் இருந்தால் ஏதாவது ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்த்து முதலீடு செய்துவிட்டு ஒரு வேலைக்கு சென்றுவிட்டால் உங்களின் பணம் விரையம் ஆகாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: