வணக்கம் நண்பர்களே!
நான் முதல் கேள்விக்கே பதில் அளிக்காமல் இருந்து வந்தேன். இதில் அடுத்த கேள்வியும் கேட்டுவிட்டேன். முதல் கேள்வியை கேட்கும்பொழுது பல நண்பர்கள் என்னைப்பற்றி பெருமையாகவும் மற்றும் அவர்களுக்கு தெரிந்த ஆன்மீக கருத்துக்களை சொன்னார்கள். யாரும் இதுவரை சரியான பதிலை சொல்லவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. பங்குபெற்ற அனைவருக்கும் மிக்க நன்றி.
உங்களுக்கு தெரிந்த சேதியை அப்படியே சொல்லுகிறேன். இரண்டு நண்பர்கள் வழியில் சந்தித்துக்கொண்டனர். ஒருவன் சொன்னான் நான் கோவிலுக்கு செல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றான். அடுத்தவன் சொன்னான் நான் வேசி வீட்டிற்க்கு செல்லுகிறேன் என்று சென்றான்.
கோவிலுக்கு சென்றவனின் மனநிலை தன் நண்பன் இந்த நேரம் சந்தோஷமாக இருந்துக்கொண்டு இருப்பான் என்று கோவில் நின்று சிந்தனை செய்துக்கொண்டு இருந்தான். வேசி வீட்டிற்க்கு சென்றவன் தன் நண்பன் இந்த நேரம் கடவுளை நன்றாக தரிசனம் செய்துக்கொண்டு இருப்பான் என்று நினைத்தான். கடவுள் வேசி வீட்டிற்க்கு சென்றவனுக்கு மோட்சத்தை கொடுத்தார் என்று சொல்லுவார்கள்.
நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்பதை எல்லாம் நான் கவலைப்படுவதில்லை எந்த இடத்தில் நீங்கள் இருந்தாலும் நீங்கள் கடவுளை நினைத்தால் போதும் என்ற நிலையை நான் முதலில் சொல்லுகிறேன்.
நோய் உள்ளவனிடம் சென்று நீ குளித்துவிட்டு மிக அழகாக சட்டை போட்டுக்கொண்டு நீ வந்தால் மட்டுமே நான் உனக்கு மருத்துவம் பார்ப்பேன் என்று ஒரு மருத்துவர் சொன்னால் அந்த நோயாளியின் நிலை எப்படி இருக்கும். நோய் உள்ளவனை அப்படியே ஏற்றுக்கொண்டு அவனுக்கு சிகிச்சையை கொடுத்து அவனை காப்பாற்றினால் மட்டுமே அவன் சிறந்த மருத்துவர்.
இந்தியாவில் உள்ள ஆன்மீகவாதிகள் பெரும்பாலும் உங்களை நான் சொல்லும் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு இருந்தால் மட்டுமே உங்களை நான் ஏற்றுக்கொண்டு எனது அடிமையாக வைத்திருப்பேன் என்பார்கள்.
நான் உங்களிடம் எந்த சட்டதிட்டங்களும் மற்றும் அடிமையாக வைத்திருக்கமாட்டேன் என்று சொல்லுவேன். இந்த காலத்திற்க்கு ஏற்ற ஒரு ஆன்மீகத்தை ஜாதககதம்பம் உங்களுக்கு கொடுக்கிறது.ஜாதகதம்பத்தின் ஆன்மீகம் எந்தவிதத்திலும் உங்களை கட்டுபடுத்தாது மற்றும் அடிமைப்படுத்தாது. உங்களை உங்களின் இயல்போடு ஏற்றுக்கொள்ளும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment