வணக்கம் நண்பர்களே!
பணம் என்ற ஒன்றை மட்டும் அனைத்து ஆன்மீகவாதிகளும் குறி வைப்பது ஏன் என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டுருந்தார்.
இன்றைய காலம் பணத்தின் கையில் இருக்கின்றது. அனைத்தும் துறந்துவிட்டேன் என்று சொல்லும் ஆன்மீகவாதிகளால் பணத்தை துறக்கமுடியாது என்ற நிலை இப்பொழுது வந்துவிட்டது. ஒரு சில நல்ல ஆன்மீகவாதிகள் எதுவும் வேண்டாம் என்று இருக்கின்றனர். அவர்களை நாம் பணத்தை தேடித்தான் ஒடுகின்றனர் என்று சொல்லிவிடமுடியாது,
பொதுமக்களுக்கு என்று தன்னை அர்பணித்துக்கொண்டவர்கள் பணத்தை முதல் இடத்தில் வைத்து ஒடுகின்றனர். இது பண உலகமாக மாறிவிட்டது. ஆன்மீகவாதிகள் முற்றிலும் துறந்து ஆன்மீகவாழ்க்கையை செய்பவர்கள் கண்டிப்பாக பணத்தை குறிவைக்கமாட்டார்கள். இவர்கள் இப்பொழுது அதிகம் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
ஊர் கதை வேண்டாம் என் கதைக்கு வருகிறேன். பொதுவாக நான் பரிகாரம் செய்வது எல்லாம் தற்பொழுது கிடையாது. சோதிடம் என்பது கர்மா தான் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அடுத்தவனின் கர்மாவில் இருந்து வரும் பணம் மிகப்பெரிய பாவம் தான். அதற்கு மாற்றுவழியை தான் இப்பொழுது கண்டுபிடித்து செய்து வருகிறேன். தொழில் செய்பவர்களுக்கு மட்டும் செய்து கொடுப்பது என்ற வழி.
தொழில் செய்பவர்களுக்கு செய்யும்பொழுது கர்மா வரும் ஆனால் தொழில் அதிபர்களின் எண்ணிக்கை குறைவு. குறைவான கர்மா மட்டும் ஏற்றுக்கொள்வோம் என்று செய்துக்கொடுக்கிறேன். பணம் வாங்காமல் நான் பரிகாரம் மக்களுக்கு செய்துக்கொடுக்கிறேன் என்று சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எனக்கு சோதிடம் வழியாக சம்பாதிப்பதில் அந்தளவுக்கு உடன்பாடு கிடையாது. வேறு வழி நமக்கு தெரியவில்லை தொழில் அதிபர்களை கூட்டு வைத்துவிட்டேன். தொழில் அதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்தவுடன் கட்டண சோதிட சேவையை நிறுத்திவிடுவேன்.
இப்பொழுது உள்ள தொழில் அதிபர்களே போதும் என்ற நிலை உள்ளது ஆனால் பணம் ஒழுங்காக வரவில்லை.ஏன் வரவில்லை என்று உட்கார்ந்து பார்த்தால் அவர்கள் செய்யும் வில்லங்க வேலை தெரிகிறது. அதனால் ஒழுங்காக நடந்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளேன். கூடுதலாக ஒரு தகவலும் அவர்களுக்கு சொல்லியுள்ளேன். உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிட்டு சென்றுவிடுங்கள் என்று சொல்லிருக்கிறேன்.
எந்த ஒரு தொழில் அதிபர்களிடமும் நீங்கள் என்னிடம் வாருங்கள் என்று சொல்லுவதில்லை. நான் செய்துக்கொடுப்பது உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்கள் செய்யுங்கள். இல்லை என்றால் சென்றுவிடுங்கள் என்று சொல்லிவிடுவேன்.
எந்த ஒரு தொழில் அதிபர்களிடமும் நீங்கள் என்னிடம் வாருங்கள் என்று சொல்லுவதில்லை. நான் செய்துக்கொடுப்பது உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்கள் செய்யுங்கள். இல்லை என்றால் சென்றுவிடுங்கள் என்று சொல்லிவிடுவேன்.
இன்றைய நாளில் பணம் இல்லை என்றால் யாரும் வாழமுடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. கிராமங்களில் கூட பணத்தின் மதிப்பு அதிகமாகிவிட்டது. பணத்தை தேடி நான் போகவில்லை பணம் என்னை தேடிவரவைக்கிறேன்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment