வணக்கம் நண்பர்களே!
நம் நாட்டில் நிறைய சோதிடர்கள் இருக்கின்றனர். மக்கள் தொகைக்கு தகுந்தவாறு சோதிடர்களும் இருக்கின்றனர். இவ்வளவு சோதிடர்கள் இருந்தும் மக்கள் பிரச்சினையில் தான் தவிக்கின்றனர் என்றால் அப்ப சோதிடர்கள் சொல்லும் பலன் தவறா அல்லது தருகின்ற பரிகாரம் தவறா என்று நான் பல முறை சிந்தனை செய்தது உண்டு.
ஒவ்வொரு சோதி்டர்களும் அவர்களின் அறிவுக்கு முடிந்தளவுக்கு பலன் மற்றும் பரிகாரத்தை கொடுக்கின்றனர். சோதிடர்களிடம் ஒரு சில தவறுகள் இருந்தாலும் மக்களிடமும் தவறு இருக்கின்றது. அதற்கு காரணம் மக்கள் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஒரு சோதிடர்களிடம் மட்டுமே கேட்பதில்லை. பல சோதிடர்களிடம் சென்று பலனை எதிர்பார்க்கிறார்கள். பல பேர்களிடம் செல்லும்பொழுது அவர்கள் சொல்லுவதும் வேறு வேறு மாதிரி தான் இருக்கும்.
நீங்கள் ஏதாவது ஒரு சோதிடரிடம் சென்று பலனை கேட்டுக்கொண்டு அதற்கு தகுந்தவாறு பரிகாரத்தை செய்யும்பொழுது நீங்கள் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
பல பேர்கள் சோதிடம் பார்ப்பதோடு சரி அதன் பிறகு அதற்க்காக எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். காரணத்தை தூக்கி விதி மேல் போட்டுவிடுவார்கள். விதி என்ற ஒன்று இருந்தாலும் புத்திசாலிதனத்தை பயன்படுத்தி நாம் அதனை வெல்லவேண்டும். நடப்பது நடக்கட்டும் என்று இருந்துவிடமுடியாது.
விதிகள் செய்யும் செயலை விட மனிதர்கள் செய்யும் தவறு அதிகம் இருக்கும். இப்பொழுது நான்கு வழி சாலை வசதி இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு அந்த வசதி இல்லாமல் ஒரே சாலையில் செல்லுவது போல் இருந்தது. அதிகமான விபத்துகளால் அந்த காலத்தில் செத்தவர்கள் அதிகம்.
இதனை விதி என்று சொல்லமுடியாது. மனிதன் செய்த தவறு என்று தான் சொல்லமுடியும். இப்பொழுது நான்கு வழி சாலையில் சென்று விபத்தை குறைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதுபோல் தான் பரிகாரமும் நாம் அதனை கடைபிடித்து வந்தால் அதாவது நம்பிக்கையோடு கடைபிடிக்கும்பொழுது உங்களின் வாழ்க்கையின் பிரச்சினை குறையும்.
ஒரு சோதிடரிடம் மட்டும் சென்று உங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள். அந்த சோதிடர் உங்களின் அறிவுக்கு தகுந்தவாறு பலனை மற்றும் பரிகாரத்தை சொல்லும்பொழுது நம்பி செய்யலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment