வணக்கம் நண்பர்களே!
நண்பர் ஒருவர் எழுதியதை உங்களுக்கு தருகிறேன். இதனைப்படித்து பிறகு என்னுடைய பதிலை தருகிறேன். படித்து பாருங்கள்.
சார் வணக்கம்,
நலமா? உங்களின் கேள்வி என்ற பதிவுக்கு எல்லோரிடமும் இருந்து ஆவலுடன் பதிலை எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இத்துடன் எனது பதிலும்.ஜாத்ககதம்பத்தை பற்றி எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன்.
ஜாதககதம்பம் எனக்கு கிடைத்த பொக்கிஷம். வேலை இல்லாமல் இருக்கும் பொழுது விடுமுறை நாட்களில் ஏதாவது ஒரு ஆன்மீக தளத்தையோ அல்லது ஜோதிட தளத்தையோ படித்துகொண்டிருப்பதுதான் எனது முதல் வேலையாக இருக்கும்.
சில நாட்களுக்கு பின்னர் இதை விட்டு விடலாம் என்று முடிவு செய்து விட்டு கடைசியாக ஒருமுறை பார்ப்போம் என்று தேடிய போதுதான் இந்த பொக்கிஷம் கிடைத்தது.
1.ஜாதககதம்பத்தில் ஆன்மீகமும் ஜோதிடமும் சேர்த்தே சொல்லியுள்ளீர்கள். இரண்டையும் தெரிந்து கொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
2.ஒவ்வொரு கிரகங்களுக்கும் எளிமையான பரிகாரம்.இவ்வளவு எளிதாக யாரும் சொல்லவில்லை. இரண்டு அல்லது அதற்கு மேலும் சொல்லி இருக்கிறீர்கள் ஒவ்வொரு கிரகத்திற்கும்.
3.சுக்கிரனுக்கு பரிஹாரம் தைலகுளியல் மற்றும் வெள்ளிக்கிழமை வெண்ணிற ஆடை அணிய வேண்டும் மற்றும் பிராமணர் வழிபடாத அம்மன். ராகுவுக்கு எளிமையான பரிகாரம் அம்மன் வழிபாடு.
4.ராகு தசா பலன்கள் பகுதி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அனைத்தும் என் அனுபவத்தில் நடந்தது மற்றும் நடந்து கொண்டிருப்பது. இதைப்பற்றி நான் ஏற்கனவே உங்களிடத்தில் சொல்லி இருக்கிறேன்
திருமண வாழ்க்கை பகுதி. மற்றும் பூர்வ புண்ணியம் அம்மன் வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு என அனைத்தையும் சொல்லி இருக்கிறீர்கள். குலதெய்வ வழிபாட்டை இந்த அளவுக்கு எந்த தளமும் சொல்லவில்லை எனபது உண்மை. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே குலதேவதை கும்பிடும் நான் இப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று வருகிறேன்.பலரும் செல்வார்கள் என்பது என் நம்பிக்கை.
5.மாந்தியை பற்றி யாரும் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள்.அதை பற்றியும் செவ்வைகிழமையின் வீரத்தை பற்றியும் தெரிந்துகொண்டேன். எனக்கு ஒரு சந்தேகம் வரும். ஏன் சலூன் கடைக்கு செவ்வாய் அன்று விடுமுறை அளிக்கிறார்கள் என்று. செவ்வாய் ரத்த கிரகம் என்பதால் அன்று ரத்த காயம் எற்படக்கூடாது என்பதற்காகத்தான். இதை ஜாதக கதம்பம் மூலமே அறிந்தேன்.
6.முன்ஜென்மத்தில் ஒருவர் எப்படி இருந்திருப்பார், யாரை அடித்திருப்பார், இப்பொழுது அவரை எப்படி அறிந்து கொள்வது மற்றும் அதிர்ஷ்டம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் , வீடு கட்டுவதற்கு பரிகாரம் வக்கிரகாளி வழிபாடு, லக்னம் வாரியாக மறுபிறவி பகுதி இதுவரை யாரும் சொல்லாத ஒன்று.
7.ஜோதிடத்தில் இவைகள் அனைத்தும் என்றால் ஆன்மீகத்தில் அரிய பொக்கிஷம் காயத்ரி மந்திரம். இதை பற்றி சொல்லி அனைவர்க்கும் பயிற்சி அளிக்கிறீர்கள். ஒரு குரு ஏன் தேவை என்பதையும் எப்பொழுது அவர் கிடைப்பார் என்பதையும் சொல்லியுள்ளீர்கள். குரு எப்படி இருப்பார் அவரின் எதிர் பார்ப்புக்கள் என்ன? நம்மை மற்ற தீய சக்திகள் அழிக்க நினைக்கும் போது தெய்வம் கூட அதை தெரிவிக்காது என்றும் குரு ஒருவரே அதை சொல்ல முடியும் என்பதையும் இதன் மூலமே தெரிந்து கொண்டேன்.
8.கடவுளைப்பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். ஜோதிடத்தை பற்றியும் எந்த தெய்வத்திற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
முக்கியமாக பச்சை பரப்புதல் என்ற ஒன்றை தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை ஜாதககதம்பத்தையே சாரும்.
9.மிகவும் முக்கியமான ஒன்று. இதுவரை நான் செய்த தவறை , (நான் மட்டுமல்ல பலபேர் செய்திருப்பார்கள்) திருத்திக்கொண்டுள்ளேன்.
என்ன என்றால் கோவிலிலோ அல்லது வீட்டிலோ விளக்கேற்றும் முறை. தீபம் நம்மை நோக்கி ஏறிய வேண்டும். நாம் தீப ஒளியில் கடவுளை தரிசனம் செய்யவேண்டும்.
10.உங்களுடைய வாழ்க்கை உங்கள் முன்னோர்கள் எப்படி இருந்தார்கள். உங்களுக்கு குரு எப்படி கிடைத்தார் என்று சொந்த அனுபவங்களையும் கூறியுள்ளீர்கள். இது போன்ற குரு நமக்கு கிடைக்க வில்லையே என்று பலபேரை வருத்தபடவைத்திருக்கும்.
11.நாய் வளர்த்தால் முன்னோர்கள் வீட்டிற்கு வரமாட்டார்கள் என்பதும் பைரவரை வீட்டில் வழிபட்டால் குடும்ப தலைவரை பிரித்துவிடுவார் என்பதும் புதுமை. ஒரு சில தளங்களில் பைரவர் வழிபாடு ஒன்றே செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அசைவத்தை முழுமையாக கைவிட்டால்தான் வழிபாடு பலன் தரும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் நீங்களோ அசைவம் சாப்பிடுவதற்கும் வழிபாட்டிற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி ஆன்மீகத்தை போதிக்கிறீர்கள்.
12.அன்னை காளிகாம்பாள் வழிபாடு (ஊரின் காவல் தெய்வம்) பற்றியும் கிரகங்களை மாற்றி அமைத்து பலன் கொடுக்க வைக்க முடியும் என்பதையும் இந்த தளமே சொல்லியுள்ளது.
13.இவ்வளவு எளிதாக ஆன்மீகத்தையும் ஜோதிடத்தையும் ஜாதககதம்பம் ஒன்றே சொல்லித்தருகிறது. ஒவ்வொரு நாளும் இன்று என்ன பதிவு வந்திருக்கும் என்று எதிர்பார்க்க வைத்து படிக்க வைப்பது இந்த இனைய தளமே ஆகும் என்பது நிதர்சனமான உண்மை. கோரக்கரை பற்றிய செய்திகள் மற்றும் இறந்தவர்களுக்கு உதவி செய்வது , சனி பிணத்திற்கு பரிகாரம் இதெல்லாம் நான் அனுபவத்தில் பார்த்தவை. இன்றுவரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜாதககதம்பத்தில் முதல் பதிவிலிருந்து மீண்டும் மீண்டும் படித்துகொண்டிருகிறேன்.
14.சில தளங்களில் அசைவத்தை விட்டுவிட்டு சில ஆண்டுகள் வழிபாடு செய்யுங்கள் என்று சொல்லும்பொழுது 108 நாட்கள் காயத்ரி மந்திரம் சொல்லுங்கள் போதும் என்றும் அதையும் 3 நாட்கள் காலையிலும் மற்ற நாட்கள் விருப்பபடி செய்யுங்கள் என்று சொல்லும் ஜாதக கதம்பம் கற்பிக்கும் ஆன்மீகமே மக்களை விரைவில் சென்றடையும் என்பது என் நம்பிக்கை.
முதல் முறை உங்களிடம் போனில் தொடர்பு கொண்ட அன்று எனக்கு உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. இதைபோல் நிறைய பேருக்கு நடந்துள்ளது.ஆனால் மறுமுறை உங்களை நேரில் பார்க்கும் போது அதுபோல் ஏதும் நடக்கவில்லை . இது எனக்கு ரொம்ப காலமாக உள்ள சந்தேகம். இதற்கு நீங்கள் சொல்லியுள்ள காரணம் உங்கள் ஆத்மா எங்கள் ஆத்மாவுடன் தொடர்பு கொள்ள முயல்கிறது.
அது ஏன் மறுமுறை நடைபெறவில்லை என்பதுதான் எனது சந்தேகம்.
எனக்கு ஆன்மீகத்தை பற்றி அதிகமாக ஏதும் தெரியாது. எனக்கு தெரிந்ததை சொல்லியுள்ளேன். இந்த தளம் மூலம் கடவுளை பற்றி
சில விசயங்களை தெரிந்து கொண்டுள்ளேன். நான் சிறு வயதிலிருந்தே கடவுளை நண்பனாக பார்ப்பதே எனது வழக்கம். ஏதாவது பிரச்சினை என்றால் கூட என் இஷ்ட தெய்வம் ஐயப்பனிடம்தான் முதலில் சொல்லுவேன். இப்பொழுது அம்மனிடமும் முறையிடுகிறேன். இன்னும் வழிப்பாட்டு முறைகளை பற்றி தெரிந்து கொண்டு வழிபடவேண்டும் என்பதே எனது ஆர்வம்.அதற்கு ஜாதககதம்பமும் நீங்களும் துணை இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இத்துடன் முடித்துகொள்கிறேன்.
ஒன்றை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். ஜாதக கதம்பம் மூலம் அம்மன் வழிபாடு செய்ததினால் எனது எதிர்மறை எண்ணங்கள் முழுமையாக நீங்கியுள்ளதை என்னால் உணர முடிகிறது. மென்மேலும் முன்னேற்றம் அடைய அம்மன்தான் துணை நிற்க வேண்டும்.
அனைத்தையும் சொல்லவேண்டும் என்றால் நீண்டு கொண்டே செல்லும் என்பதால் இத்துடண் முடித்துகொள்கிறேன். ஆனால் நீங்கள் என்ன எதிர்பார்த்து இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள் என்பதை என்னால் இன்னும் யூகிக்க முடியவில்லை.
பதில்
இவர் அனுப்பிய இந்த பதிலில் ஒரு தகவலை கேட்டுள்ளார். ஆத்மா தொடர்புக்கொள்ள நினைப்பது என்ற கருத்து மட்டுமே அது. அதனை குரு அவர்கள் எடுத்துவிட்டார் அதற்கான காரணம் வெளியில் இதனை வைத்திருக்கும்பொழுது பெரிய பிரச்சினையை ஒரு சிலருக்கு உருவாக்கிவிடுகிறது. அதற்காக குரு அவர்கள் எடுத்துவிட்டார். ஆன்மீகம் படிப்படியாக தான் வரவேண்டும் என்று சொன்ன காரணத்தால் அதனை எடுத்துவிட்டு வேறு ஒரு முறையில் அதனை தந்துக்கொண்டு இருக்கிறோம். அம்மனின் அருள் கண்டிப்பாக உங்களின் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செய்து வைத்திருக்கிறேன். ஆன்மீக பயிற்சியை பொறுத்தவரை சின்ன தவறு செய்தாலும் அது மரணத்தை தரும் என்பதால் அதனை எடுத்துவிட்டோம். கொஞ்சம் நீங்கள் அனைவரும் பயிற்சி செய்தால் அனைவருக்கும் இந்த சக்தியை உணரமுடியும். ஏதோ ஒரு ஆன்மீகப்பயிற்சியை செய்துவிட்டு என்னிடம் பேசும்பொழுது உங்களுக்கு கிடைக்கும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment