Followers

Wednesday, April 8, 2015

காடு


வணக்கம்!
         ஆந்திராவில் செம்மரகடத்தல் என்ற பெயரில் தொழிலாளிகளை சுட்டுக்கொன்றனர் என்ற செய்தியை பார்த்தேன். இதனைப்பற்றி நான் ஒரு பதிவில் ஏற்கனவே சொல்லிருந்தேன். இனிமேல் காடுகளுக்கு சென்று எந்தவித ஆன்மீகப்பயிற்சியும் செய்யமுடியாது என்பதை சொல்லிருந்தேன். அதுப்போலவே நடந்துள்ளது.

காட்டிற்க்குள் தவறு நடந்ததா அல்லது நடக்கவில்லையா என்பதைப்பற்றி எல்லாம் நாம் ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை. பொதுவாகவே காடுகளை மனிதன் அழிக்க தொடங்கிவிட்டான். காடுகளில் மனிதன் பாதுகாக்கிறேன் என்று சொல்லி அதனை அழிக்கதான் தொடங்கியுள்ளான். பாதுகாப்பு என்ற பெயரில் காவலில் இருப்பவர்களே காடுகளை அழிப்பது எல்லாம் நடைபெறுகிறது.

இந்தியா ஆன்மீகத்திற்க்கு ஏற்ற நாடு என்பது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. இங்குள்ள சூழ்நிலை மாறிவருகிறது. இப்படியே சென்றால் கொஞ்ச காலத்தில் அதாவது நாம் வாழும் காலத்திலேயே ஆன்மீகத்திற்க்கும் இந்தியாவிற்க்கும் சம்பந்தமே இல்லை என்ற நிலை கூட ஏற்படலாம்.

காடுகளில் உள்ள மூலிகைகளால் தான் இந்தியா சக்தி மிகுந்த நாடாக இருக்கிறது. இங்குள்ள கோவில்களுக்கு இந்த மூலிகைகள் தான் சக்தியை தருகிறது. அதனை எல்லாம் அழிக்கும் வேலையாக தான் நிறைய பேர் செய்து வருகின்றனர்.

நாங்கள் காடுகளுக்கு செல்லும்பொழுது காடுகளில் உள்ள மரங்களுக்கோ அல்லது விலங்குகளுக்கோ எந்த வித சிறு தொந்தரவும் செய்தது கிடையாது. நமது எண்ணத்தில் சிறிய கெட்ட எண்ணங்கள் இருந்தால் கூட அதன் ஒரிஜினல் தன்மை அழிந்துவிடும் என்பதால் நல்ல எண்ணத்தோடு காடுகளுக்கு சென்று வரவேண்டும் என்று குரு சொல்லுவார்.

தற்பொழுது உள்ள சூழ்நிலையிலேயே நீங்கள் எல்லாம் எல்லா இடங்களுக்கும் சென்று வந்துவிடுவது நல்லது. அதன் உண்மையான தன்மை அழிவதற்க்குள் சென்றுவந்துவிடுவது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: