வணக்கம்!
ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நிலை பயணத்தை தரும் என்பது ஏற்கனவே நாம் பார்த்து இருக்கிறோம். ஒருவர் பயணம் செய்தால் தான் அவருக்கு பல விசயங்கள் புலப்படும். நிறைய அறிவை பெறமுடியும். சந்திரனை வைத்து உங்களின் பயணம் எப்படி இருக்கும் என்று சொல்லிருக்கிறேன். படித்து பயன் பெறுங்கள்.
ஒருவருக்கு சந்திரன் ஏழில் இருந்தால் அவரின் பயணம் ஒரு இடத்திற்க்கு சென்ற பிறகு அவரின் அடுத்த பயணதிட்டம் உதயமாகும் என்று சொல்லலாம்.
திருச்சியில் இருந்த மதுரைக்கு சென்றால் மதுரையில் இருந்து திருநெல்வேலி சென்று வர வாய்ப்பு அமையும். அவரின் பயணத்தில் மதுரை தான் பயணம் என்று பயணத்தை தொடங்கினால் மதுரைக்கு சென்ற பிறகுதான் திருநெல்வேலி பயணம் திட்டம் ஆரம்பமாகும். இது சந்திரன் ஏழில் இருந்தால் இப்படி நடக்கும்.
சந்திரன் ஆறில் இருந்தால் அவர் பயணம் அடிக்கடி எதிராளியின் வீட்டிற்க்கு பயணம் மேற்க்கொள்பவராக இருப்பார். அதோடு அவரின் பயணம் செல்லும் இடத்தில் எல்லாம் அவர்க்கு எதிர்மறையான ஒரு சிக்கல் உருவாகும்.
ஒருவர் சென்னையில் இருந்து வேலூர் செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம் வேலூரில் அவர் சென்ற இடத்தில் அவர்க்கு இணக்கமான ஒரு சூழ்நிலை உருவாகாது. பயணத்தால் ஒரு நல்ல விசயம் நடக்காமல் போய்விடகூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
ஒருவர்க்கு சந்திரன் ஐந்தில் நின்றால் அவருக்கு அடிக்கடி பயணம் அவரின் குலதெய்வ கோவிலுக்கு இருக்கும் அல்லது அவரின் பூர்வீகத்திற்க்கு அடிக்கடி சென்றவரவேண்டும் என்ற நிலை உருவாகும்.
இன்று பலர் வேலை தேடி நகரத்திற்க்கு செல்லுகின்றார்கள். அவர்கள் மாதத்திற்க்கு ஒருமுறையாவது தன்னுடைய சொந்தஊருக்கு சென்று வருகின்றார்கள் அல்லவா. இது எல்லாம் ஐந்தாவது வீட்டில் சந்திரன் இருந்தால் அல்லது ஐந்தில் சந்திரன் சம்பந்தப்படகூடிய நேரத்தில் நடக்ககூடிய பயணம் என்று சொல்லலாம்.
ஒருவருக்கு சந்திரன் நான்காவது வீட்டில் இருந்தால் அவருக்கு பயணம் அவரின் தாய்வீட்டிற்க்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு இருக்கும். ஒரு சிலர்க்கு மாமனார் வீட்டிற்க்கும் செல்லும் பயணமாக அதிகம் இருக்கும்.
ஒரு சிலருக்கு இந்த பயணம் அதிகமாக சுகத்தை தேடிகூட அமைவதாக இருக்கும். இன்பசுற்றுலா எல்லாம் செல்கின்றார்கள் அல்லவா அதுபோல அமைவதும் இந்த அமைப்பில் இருந்தால் நடக்ககூடிய ஒன்று.
ஒருவருக்கு சந்திரன் மூன்றாவது வீட்டில் இருந்தால் அடிக்கடி ஊர் சுற்றும் வாய்ப்பு இருக்கும். வீட்டில் இருக்கவே மாட்டார்கள் வீட்டிற்க்கு வந்தால் கூட அடுத்தவீட்டில் சென்று தான் உட்கார்ந்துக்கொண்டு பேசிக்கொண்டு இருப்பார்கள்.
ஒரு சிலருக்கு இந்த அமைப்பு இருந்தால் நல்லதை விட சும்மா ஊரை சுற்றிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு காலத்தை கடத்துபவர்களாகவும் இருப்பார்கள். அவர் அவர்களின் ஜாதகத்தை பொறுத்து இது அமையும்.
ஒருவருக்கு சந்திரன் இரண்டாவது வீட்டில் அமைந்தால் அவரின் பயணத்தால் பல நன்மை அமையும். அவரின் பயணம் தன்னுடைய குடும்பத்திற்க்கு பொருள் ஈட்டுவதற்க்காகவே அமைகின்றமாதிரியே இருக்கும்.
தன்னுடைய குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் வேறு இடத்தில் வீடுகட்டிக்கொண்டு இருந்தால் அங்கு சென்று தங்கிவிட்டு வருவார்கள். பயணத்தால் பலன் உண்டு என்று சொல்லலாம்.
ஒருவருக்கு சந்திரன் லக்கனத்தில் அமர்ந்தால் அவர் தன்னுடைய வேலையாக்காகவே பயணம் மேற்க்கொள்பவராக இருப்பார்கள். அதாவது வெளியில் எங்கோ செல்கிறேன் அதாவது பிறர் வேலைக்கு செல்கிறேன் என்று சென்று தன்னுடைய வேலையை பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.
இந்த அமைப்பால் பயணத்தால் நல்ல பலன் உண்டு என்று சொல்லலாம். பயணத்தால் இன்று பலன் இல்லை என்ற நிலை வந்தப்பொழுதும் எதிர்காலத்தில் அந்த பயணத்தால் இவர்களுக்கு பலன் கிடைத்துவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment