வணக்கம்!
நான் சொன்ன ராகு மேட்டர் நல்ல போய் சேர்ந்து இருக்கின்றது என்று நினைக்கிறேன். முடிந்தளவு அதனைப்பற்றி நண்பர்கள் எல்லோரும் கேட்கிறார்கள். மனிதனுக்கு முன்னேறவேண்டும் என்ற ஆசை வந்தாலே போதும் எப்படியாவது முன்னேறிவிடுவான்.
ராகுவை வைத்து தான் எல்லாவற்றையும் செய்யவேண்டும் என்பதில்லை. எந்த ஒரு கிரகத்தையும் வைத்து நாம் முன்னேற்றம் அடைந்துவிடலாம்.
இன்றைய காலகட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கின்றது. நான் முன்பே சொன்னது போல ஐந்து பேரை எடுத்து அவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று அந்த பேரை தேர்ந்தெடுத்து செய்துக்கொண்டு இருக்கிறேன். பல நண்பர்களை இதற்காக தொடர்புக்கொண்டார்கள் ஆனால் ஒரு சிலரை மட்டும் தேர்ந்தெடுத்தேன்.
உண்மையை சொல்லபோனால் இவர்களுக்கு சனிக்கிரகத்தை வைத்து தான் பல நல்லது செய்துக்கொண்டு இருக்கிறேன். பெரும்பாலும் கிராம பகுதியில் உள்ளவர்களை தேர்ந்தெடுத்த காரணத்தால் சனிக்கிரகத்தை வைத்து செய்யலாம் என்று சனியை தேர்ந்தெடுத்தேன்.
என்னை தொடர்புக்கொள்ளாதவர்கள் பலர் தேர்தலில் நின்றுக்கொண்டு இருப்பீர்கள். அவர்கள் எல்லாம் சனிக்கிரகத்தை மட்டும் வணங்கி கூட வெற்றி பெறமுடியும்.
சனி என்ற கிரகம் மந்தம் என்றாலும் மிதமாக வேலை செய்தாலும் சரியான ஒரு வெற்றியை கொடுக்ககூடிய ஒரு கிரகம். தேர்தலுக்கு மட்டும் இது கிடையாது தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கைக்கும் இது உத்திரவாத உள்ள ஒரு நல்ல நிலையை ஏற்படுத்திக்கொடுக்கும். அதனால் தான் பழைய காலத்தில் சொல்லியுள்ளார்கள் சனியை போல் கொடுப்பவன் இல்லை என்று சொல்லியுள்ளார்கள்.
குருவின் ஆணைபடி நவராத்திரி ஹோமம் முதல் மூன்று நாட்கள் மட்டும் நடத்தப்படுகிறது.
விரைவில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதியில் உள்ள நண்பர்களை சந்திக்க இருக்கிறேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment