Followers

Monday, October 31, 2016

குரு சந்திரன்


வணக்கம்!

              குரு சந்திரன் சேர்ந்து இருந்தால் குரு சந்திர யோகம் என்பார்கள். சந்திரனுக்கு குருவின் பார்வை கிடைத்தாலும் அந்த யோகம் செயல்படும். இந்த யோகம் இருந்தால் அவர்களுக்கு வற்றாத பணவரவு இருந்துக்கொண்டே இருக்கும்.

சந்திரன் கிரகம் முகத்திற்க்கு காரகம் வகிக்கிறார் என்று சொல்லுவார்கள். ஒருவரின் முகத்தில் தெய்வீகதன்மையோடு இருக்கவேண்டும் என்றால் அவர்க்கு சந்திரனோடு குருவும் சேர்ந்து இருந்தால் அப்படிப்பட்ட முகம் அமையும். சாந்தமான முகம் இருக்ககூடிய அமைப்பு குருவும் சந்திரனும் இணையும்பொழுது அமையும்.

சந்திரன் மனக்காரகன் என்பதால் குருவோடு இணையும்பொழுது நினைப்பு அதிகம் தெய்வீகதன்மையோடு இருக்கும். தெய்வீகத்தை பற்றி அதிகம் பேசுபவர்களாக இருப்பார்கள்.

குருவும் சந்திரனும் மறைவு இடத்தில் இருந்தால் அதுவே எதிராகவும் சிந்திக்க தோன்றும். என்ன தெய்வம் என்ன வழிபாடு இது எல்லாம் முட்டாள் தனம் என்று பேசுவார்கள்.

மறைவுஇடத்தில் இரண்டு கிரகங்களும் இருந்தால் அதிகமாக இவர்களுக்கு வரவேண்டிய பணமும் திடீர் என்று கிடைப்பது போல இருக்கும். அந்த பணமும் ஏதோ தெய்வீக இடத்தில் இருந்து கிடைப்பது போல் இருக்கும்.

குரு சந்திரனும் அமையபெற்ற ஒருவருக்கு பணவரவு நன்றாக இருக்கும் அதே நேரத்தில் ஒரு சில கிரகங்களின் பாதிப்பு காலத்தில் பணவரவு குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் இரண்டு கிரகத்தையும் வணங்கி வந்தால் போதுமானது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: