வணக்கம்!
இன்றைக்கு இருக்கும் நமது நண்பர்கள் பெரும்பாலும் அவர்களின் தாத்தாவிற்க்கு அவரின் தந்தைக்கு அவருக்கு அவரின் வாரிசு என்று சேர்த்து சம்பாதிக்கவேண்டிய ஒரு நிலை இருக்கின்றது.
உங்களுக்கு முன்னாடி யாரும் சம்பாதிப்பதற்க்கு வாய்ப்பு குறைவு என்பதால் இப்படி சொல்லுகிறேன். ஒரு சிலருக்கு மட்டும் சொத்து இருக்கலாம் பெரும்பாலும் இருப்பதற்க்கு வாய்ப்பு இல்லை.
நான் சந்தித்த பெரும்பாலும் நண்பர்களின் நிலை சொத்து இருந்ததில்லை என்று தான் சொல்லியுள்ளனர். இன்றைக்கு எல்லாவற்றிக்கும் சேர்த்து சம்பாதித்துக்கொண்டு இருக்கின்றார்கள். எல்லாவற்றிக்கும் சேர்த்து சம்பாதிக்கவேண்டும் என்று நினைக்கும்பொழுது நிறைய கஷ்டங்கள் இருக்கின்றன. கண்டிப்பாக இருக்கதான் செய்யும்.
இன்றைக்கு நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்துக்கொண்டு இருந்தாலும் இன்றை மட்டும் செய்யுங்கள் அதாவது உங்களுக்கு மற்றும் உங்களின் வாரிசுகளுக்கு சொத்து சேர்க்கவேண்டும் என்பதற்க்கு செவ்வாய்கிழமையில் செவ்வாய்கிரகத்திற்க்கு விரதம் இருந்து வாருங்கள்.
நம்முடைய வாரிசுகளுக்கு சொத்து மட்டும் சேர்த்து வைத்தால் போதாது அதோடு செவ்வாய்கிரகத்தின் அருளையும் சேர்த்து வைக்கவேண்டும். செவ்வாய்கிரகத்தின் அருள் இல்லை என்றால் சேர்த்து வைத்த சொத்து அனைத்தும் வாரிசு விற்றுவிட்டு சென்றுவிடுவார்கள்.
சொத்து சேர்த்த பல நண்பர்கள் இன்றைக்கு அவர்களின் பூர்வ சொத்தை விற்று செலவு செய்வதையும் பார்த்து இருக்கிறேன். அதற்கு எல்லாம் காரணம் செவ்வாய்கிரகத்தின் அருள் இல்லாமல் இருப்பது தான் காரணமாக இருக்கின்றது.
செவ்வாய்கிழமை தோறும் செவ்வாயின் அதிதேவதை முருகனுக்கு விரதம் இருந்து வாருங்கள். பல வழிகளிலும் உங்களுக்கு அது நன்மை தரும். நிறைய அனுபவத்தில் இருந்து இதனை உங்களுக்கு கொடுக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment