Followers

Tuesday, October 25, 2016

விளையாட்டும் செவ்வாய் கிரகமும்


ணக்கம்!
          செவ்வாய் கிரகம் ஒருவருக்கு ஏழில் அமர்ந்து இருந்தது. அவருக்கு இளம்வயதில் செவ்வாய் தசா ஆரம்பம் ஆனது. இளம் வயதில் ஒருவருக்கு செவ்வாய் தசா வந்தால் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். 

நான் சந்தித்த நபருக்கும் இளம்வயதில் அதாவது பள்ளிபருவ வயதில் நிறைய விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று பரிசு வாங்கியுள்ளார். அதே நேரத்தில் அவருக்கு நிறைய பருவும் வந்துள்ளது. அந்த பரு வந்ததால் முகத்தில் தளும்பு போல் இருக்கின்றது. இன்றைக்கும் அந்த தளும்பு மாறிவில்லை அப்படியே இருக்கின்றது.


விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று நிறைய பரிசு வாங்கியிருந்தாலும் எந்த நேரமும் அந்த காலத்தில் விளையாட்டில் கவனம் செலுத்திக்கொண்டு இருப்பார். இன்றைய காலத்தில் செவ்வாய் தசா ஒரு பையனுக்கு நடைபெற்றால் டிவியில் விளையாட்டு போட்டியை பார்த்துக்கொண்டு இருப்பான். விளையாட்டையும் தொலைத்துவிட்டோம் விளையாடும் இடம் முழுவதும் வீட்டை கட்டிவைத்துவிட்டோம் அப்புறம் எங்கே சென்று விளையாடுவது. இது தான் படித்த படிப்பு கற்றுகொடுத்த பாடம் நம்மை நாமே நசுக்கிக்கொள்வது.

தற்காலத்தில் செவ்வாய் தசா நடந்தால் அந்த பையனை நீங்கள் வீட்டில் வைத்திருந்தால் வீட்டில் ஒரு பொருளும் இருக்காது. விளையாடுகிறேன் என்று அனைத்தையும் உடைத்துவிடுவான். சரி நாம் மேட்டருக்கு வருவோம்.

செவ்வாய் தசா நடக்கும்பொழுது சம்பந்தப்பட்ட நபருக்கு ஒரு விபத்து நடந்தது. அதில் அவரின் தாடை கொஞ்சம் அடிப்பட்டு காயம் ஏற்படுத்தியது. ஏழில் நின்ற செவ்வாய் லக்கினத்தை பார்த்த காரணத்தால் முகப்பகுதியில் அடிப்படும்.

இன்றைக்கு செவ்வாய் தசா உங்களுக்கு நடந்தால் கண்டிப்பாக ஏதாவது ஒரு விபத்தை நீங்கள் சந்திக்கவேண்டும். விபத்து சிறியதா அல்லது பெரியதா என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்.

செவ்வாய் தசா நடந்தாலும் சரி நடக்காவிட்டாலும் சரி உங்களின் குழந்தைகளை நன்றாக விளையாட அனுமதியுங்கள். எதிர்காலத்தில் சிறந்து விளங்குவார்கள். எதிர்மறையான எண்ணங்களை ஒழிக்க விளையாட்டு உறுதுணை புரியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: