வணக்கம்!
சனிக்கிரகம் ஒரு தீயகிரகம் என்று சோதிடம் தெரியாதவர்களுக்கு கூட தெரியும். சனிக்கிரகம் மோசமான ஒரு நிலையில் அமரும் ஜாதகர்களுக்கு கூட ஒரு சில நல்ல காலத்தில் அவர்களுக்கு சனிக்கிரகம் அள்ளி அள்ளி கொடுக்கிறது.
மறைவு ஸ்தானத்தில் அமர்ந்தால் அது இன்னமும் அதிகமாக கொடுக்கிறது என்பதை நான் பார்த்த பல அனுபவத்தில் பார்த்து இருக்கிறேன்.
சனிக்கிரகம் மறைவு ஸ்தானத்தில் அல்லது கெடுதல் தரும் நிலையில் இருக்கும் ஜாதகர்களுக்கு இளமையில் கடுமையான வறுமையில் மாட்ட வேண்டும். அப்படி வறுமையில் மாட்டி வந்துவிட்டால் அதன் பிறகு அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்துவிடும்.
கடுமையான வறுமையை கொடுக்கும்பொழுது அவர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும். அந்த அனுபவம் அவர்களுக்கு பல நல்ல படிப்பினையும் கொடுக்கும்.
சனிக்கிரகம் தன்னுடைய தசாவில் தான் கொடுக்கும் என்று கிடையாது. பல பேர்களின் ஜாதகத்தில் நான் பார்த்தவரை சனிக்கிரகம் எந்த தசாவிலும் நல்லதை கொடுக்கிறது. சனிதசா நடக்கவேண்டும் என்பதில்லை எப்படியாவது திடிர் யோகத்தை கொடுத்து தூக்கிவிடுகிறது.
சனிக்கிரகம் உங்களின் ஜாதகத்தில் எப்படி இருக்கின்றது என்பதை பாருங்கள். சனிக்கிரகம் மறைவுஸ்தானத்தில் இருந்து உங்களுக்கு யோகத்தை கொடுத்ததா என்பதை கவனியுங்கள். யோகத்தை கொடுக்கவில்லை என்றால் ஏன் கொடுக்கவில்லை என்று பாருங்கள். ஏதோ ஒரு சிறு தடங்கல் இருக்கும் அதனை சரிசெய்துக்கொள்ளமுடியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment