வணக்கம்!
ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவர்களின் ஜாதகத்தை எடுத்து பார்த்து அதற்கு பரிகாரம் செய்யவேண்டும். அவர்களின் லக்கினம் எது என்று கண்டுபிடித்து அதன் வழியாக முழுமையான பலனை அறிந்து பரிகாரம் செய்யலாம்.
சந்திரனை பார்த்து உடல்நிலையை பார்க்ககூடாது. மனரீதியாக பிரச்சினை வந்து அதன் வழியாக உடல் பிரச்சினை என்றால் நீங்கள் சந்திரனை பார்க்கலாம். இன்றைய சோதிடம் எல்லாம் எப்படி இருக்கின்றது என்றால் சந்திரனை பார்த்து கோச்சாரபலனை தெரிந்து அவர்க்கு பலனை பார்க்கிறார்கள்.
ஒருவருக்கு வந்த பிரச்சினை எப்படி என்று பார்க்கவேண்டும் அல்லது முன்கூட்டியே இது தான் பிரச்சினை என்று பலனை தெரிந்துக்கொள்ளமுடியும். அதனை வைத்து தான் பரிகாரம் செய்யவேண்டும்.
உடல் என்றால் லக்கினத்தை பாருங்கள். மனரீதியாக வருகின்றது என்றால் சந்திரனை பாருங்கள். ஒருவருக்கு இரண்டும் ஒன்றாக இருந்தால் ஒரே மாதிரியாக செய்துவிடலாம். கோச்சாரரீதியாக எதனையும் முடிவு செய்துவிடாதீர்கள்.
நமது அம்மன் பூஜை இந்த நவராத்திரியிலேயே செய்வதாக முடிவு எடுத்து இருக்கிறேன். அம்மன் பூஜைக்கு காணிக்கையை அனுப்புவர்கள் அனுப்பி வைக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment