வணக்கம்!
ஜாதக கதம்பத்தில் இரண்டாம் வீட்டைப்பற்றி நிறைய எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன். இரண்டாம் வீட்டைப்பற்றி நம்ம ஆட்கள் அதிகம் கேட்பார்கள். சார் இரண்டாம் வீட்டு அதிபதிக்கு என்னன்ன செய்யலாம் என்று கேட்பார்கள்.
பொதுவாக மக்களின் அதிகப்பட்ச தேவையை அனைத்தையும் பூர்த்திசெய்வது பணம். பணம் வரும் வழி இரண்டாம் வீடு என்பதால் அந்த வீட்டிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கிறேன்.
பெரும்பாலும் இரண்டாம்வீடு ஏதாவது ஒரு விதத்தில் அடிப்படுவது உண்டு. ஒரு சிலருக்கு பணம் வரும் ஆனால் சாப்பிடமுடியாது. ஒரு சிலருக்கு இரண்டும் இருக்கும் வீட்டில் நிம்மதி இல்லாமல் வெளியில் சுற்றிக்கொண்டு இருப்பார்கள். இன்னும் நிறைய செய்தி இரண்டாவது வீட்டிற்க்கு உண்டு என்பது உங்களுக்கு தெரியும்.
இரண்டாம் வீடு மிகசரியாக நிதானமாக செயல்படும்பொழுது தான் அந்த வீட்டின் அனைத்து குணத்தையும் ஒருவர் பெறமுடியும். பெரும்பாலும் ஜாதகத்தில் உள்ள அனைத்து வீடுகளும் அப்படி தான் வேலை செய்யவேண்டும். கோடியில் ஒருவருக்கு வேலை செய்வதே பெரிய ஆச்சரியம் தான்.
இரண்டாம் வீட்டை விடுங்கள். உங்களின் ஜாதகத்தில் எட்டாவது வீட்டை பாருங்கள் அங்கு யார் இருக்கிறார் என்பதை பாருங்கள். அவர் தான் உங்களுக்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்ககூடியவர். எட்டாவது வீட்டில் இருந்து இரண்டாவது வீட்டை பார்ப்பவர் அவர் தான். அவரின் பார்வையில் இரண்டாவது வீடு இருக்கின்றது இரண்டாவது வீட்டிற்க்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கிறாரா அல்லது வேறு ஏதாவது கொடுக்கிறரா என்பதை தெரிந்தால் தான் இரண்டாவது வீட்டின் நிலை என்ன என்பது புரியும்.
எட்டாவது வீடு உங்களின் ஆயுளை தீர்மானிக்ககூடிய ஒரு வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் அமரும் கிரகம் அல்லது அந்த வீட்டின் அதிபதியின் பார்வை இரண்டாவது வீட்டிற்க்கு கிடைத்தால் அது தான் லட்சுமி கடாட்சம் என்று சொல்லுவார்கள். இதனைப்பற்றி வரும் பதிவில் பார்க்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment