வணக்கம்!
செவ்வாய்க்கு பரிகாரம் என்று சொன்னவுடன் பல நண்பர்கள் தங்களின் ஜாதகத்தை அனுப்பி அதற்குரிய பலனை கேட்டுக்கொண்டுள்ளனர். அதற்கான பரிகாரம் சரியான ஒரு முறையில் செய்ய திட்டமிட்டுள்ளேன்.
பலர் செவ்வாய் உச்சத்தில் இருக்கும் ஜாதகத்தை அனுப்பி எனக்கு பிரச்சினை இருக்கின்றது என்று கேட்டுள்ளனர். பலர் எதற்கு என்று தெரியாமல் ஜாதகத்தை அனுப்பியுள்ளனர். ஒவ்வொரு ஜாதகத்தையும் நன்றாக பார்த்து அதற்கு தீர்வை செய்யவேண்டும் என்பதற்க்காக தான் முன்கூட்டியே இதனை ஆரம்பித்தேன்.
ஒரு சில நண்பர்கள் ஜாதகத்தை அனுப்பி செவ்வாய்க்கு சம்பந்தமே இல்லாத வினா எல்லாம் எழுப்பினர். பொதுவாக நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கு என்று தனிநேரத்தை ஒதுக்கி அதற்கு விடையை கொடுப்பவன் நான். பணம் இருக்கின்றது இல்லை என்பது எல்லாம் நான் பார்ப்பது கிடையாது. உதவி என்று வந்தவர்களுக்கு உதவவேண்டும் என்று நினைப்பேன். தவறாக பயன்படுத்தவேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.
செவ்வாய் என்றவுடன் அதிகமாகவே பலர் அச்சத்தில் இருப்பதும் தெரியவந்தது. நாம் முருகனுக்கு பல நல்லதை செய்கிறோம் அது கண்டிப்பாக நம்மை காப்பாற்றும். பயம் கொள்ள தேவையில்லை.
பலர் ஜாதகத்தை தொடவே இல்லை என்பதும் தெரிகிறது. முதலில் உங்களின் ஜாதகத்தை எடுத்து செவ்வாய்கிரகம் எப்படி இருக்கின்றது என்பதை பாருங்கள் அதன் பிறகு பாக்கி எல்லாம் பார்த்துக்கொள்ளலாம்.
உங்களின் ஜாதகத்தில் செவ்வாய்கிரகம் நன்றாக இல்லாமல் போனாலும் உங்களின் வாழ்வில் நீங்கள் சைன் ஆகமுடியாது என்பது மட்டும் நான் அனுபவத்தில் கண்ட உண்மை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment